Indian diaspora across the world are true and permanent ambassadors of the country, says PM Modi
In whichever part of the world Indians went, they not only retained their Indianness but also integrated the lifestyle of that nation: PM
Aspirations of India’s youth and their optimism about the country are at the highest levels: PM Modi
India, with its rich values and traditions, has the power to lead and guide the world dealing with instability: PM Modi
At a time when the world is divided by ideologies, India believes in the mantra of ‘Sabka Sath, Sabka Vikas’: PM

புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய வம்சாவளி நபர்கள் -நாடாளுமன்றவாதிகள் (PIO-Parliamentarian) கருத்தரங்கின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார்.

கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை வரவேற்ற பிரதமர், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஏராளமானோர் இந்தியாவை விட்டு வெளியேறியபோதிலும், அவர்களின் மனதிலும், இதயத்திலும் இந்தியா தொடர்ந்து இடம்பிடித்துள்ளதாக தெரிவித்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள், தாங்கள் ஏற்றுக் கொண்ட நாடுகளுடன் தங்களை முழுமையாக ஒருங்கிணைத்துக் கொண்டது ஆச்சரியமளிக்கவில்லை என்று பிரதமர் கூறினார். அவர்கள் தங்களுக்குள்ளேயே இந்தியன் என்ற உணர்வை உயிர்ப்பித்து வந்தபோதிலும், தாங்கள் இடம்பெயர்ந்துள்ள நாடுகளில் உள்ள மொழி, உணவு, உடை ஆகியவற்றை ஏற்றுக் கொண்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களின் சிறிய உலக நாடாளுமன்றமே தில்லியில் இன்று கூடியுள்ளது போன்று தோன்றுவதாக பிரதமர் தெரிவித்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், இன்று மொரீஷியஸ், போர்த்துக்கல் மற்றும் அயர்லாந்து நாடுகளின் பிரதமர்களாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். மேலும் அவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், பல்வேறு நாடுகளில் உள்ள மாநிலங்கள் மற்றும் நாடுகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பதாக தெரிவித்தார்.

இந்தியா குறித்த உலக நாடுகளின் எண்ணம், கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் மாறியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இந்தியா தனக்குள்ளேயே மாற்றம் பெற்றுவருவதே இதற்கு காரணம் என்று அவர் கூறினார். இந்தியா மீதான நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் இதுவரை இல்லாத வகையில் உயர்ந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். ஒவ்வொரு துறையிலும், மீண்டும் திரும்பப்பெற  முடியாத அளவில் மாற்றத்துக்கான அறிகுறி தெரிவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இந்திய வம்சாவளி நபர்கள் என்பவர்கள், இந்தியாவின் நிரந்தரத் தூதர்களைப் போன்றவர்கள் என்று பிரதமர் தெரிவித்தார். அவர்கள் எங்கு வசித்துவந்தாலும், தான் வெளிநாடு செல்லும்போது, அவர்களை சந்திக்க எப்போதுமே முயற்சி மேற்கொள்வதாக பிரதமர் கூறினார்.

வெளிநாடுகளில் வசித்துவரும் இந்திய குடிமக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதற்காக வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை பிரதமர் பாராட்டினார். இந்த சூழலில், தூதரக ரீதியாக குறைகளை உடனுக்குடன் கண்காணிக்கவும், தீர்க்கவும் ஏற்படுத்தப்பட்டுள்ள “மடாட்” (MADAD) வலைதளத்தை பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் வளர்ச்சியில் கூட்டாளிகளாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் இருப்பதாக அரசு நம்புவதாக பிரதமர் தெரிவித்தார். நித்தி ஆயோக் வகுத்துள்ள 2020-ம் ஆண்டு வரையான செயல் திட்ட வரைவில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.

நிலையற்ற தன்மை நிலவும் காலத்தில், ஒட்டுமொத்த உலகுக்கும் வழிகாட்டியாக இந்திய நாகரீகம் மற்றும் கலாச்சார மதிப்புகள் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

ஆசியான் நாடுகளுடன் மிக நெருங்கிய நட்புறவை இந்தியா வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், இது அடுத்த சில நாட்களில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் வெளிப்படுத்தப்படும் என்று கூறினார்.

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 21, 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage