PM Narendra Modi inaugurates India’s largest cheese factory in Gujarat
Along with ‘Shwet Kranti’ there is also a ‘Sweet Kranti’ as people are now being trained about honey products: PM
Government has been successful in weakening the hands of terrorists and those in fake currency rackets: PM
NDA Government is working tirelessly for welfare of the poor: PM Modi
India wants progress and for that evils of corruption and black money must end: PM

 

குஜராத் மாநிலம் டீசாவில் பனஸ்கந்தா கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் (பனஸ் பால் பண்ணை) ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார்.

பனஸ் பால் பண்ணையின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் தொடக்கமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

பாலாடைக் கட்டி தயாரிப்பு பிரிவு தொடங்கப்படுவதன் அடையாளமாக கல்வெட்டு ஒன்றை இந்த நிகழ்ச்சியில் பிரதமர் திறந்து வைத்தார். பலன்பூரில் பால்கட்டி உறைநீர் உலர்த்தும் பிரிவை ரிமோட் கண்ட்ரோல் மூலம் அவர் தொடங்கி வைத்தார்.

ஏராளமாக திரண்டிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், தங்களால் என்ன சாதிக்க முடியும் என்று வடக்கு குஜராத் விவசாயிகள் உலகிற்குக் காட்டியுள்ளனர் என்று கூறினார்.

அந்தப் பகுதியில் சொட்டு நீர்ப் பாசனம் எவ்வளவு பரவலாக விவசாயிகளுக்கு பலன் கொடுத்திருக்கிறது என்பது பற்றி பிரதமர் குறிப்பிட்டார். ``இங்குள்ள விவசாயிகள் பால்பண்ணை மற்றும் கால்நடை பராமரிப்புக்கு மாறியுள்ளனர். இது விவசாயிகளுக்கு நன்மை தருகிறது'' என்று பிரதமர் மோடி கூறினார். வெண்மைப் புரட்சியுடன் சேர்ந்து, இனிப்புப் புரட்சியும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் இப்போது தேன் பொருள்களிலும் பயிற்சி பெறுகின்றனர் என அவர் தெரிவித்தார்.

பணம் மதிப்பிழக்கச் செய்யும் நடவடிக்கை பற்றிப் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் மற்றும் கள்ளநோட்டு மோசடிகளில் ஈடுபடுபவர்களின் கரங்களை அரசு வெற்றிகரமாக பலவீனப்படுத்திவிட்டது என்று கூறினார்.

ஏழைகளின் நலனுக்காக மத்திய அரசு ஓய்வின்றி உழைப்பதாக திரு மோடி தெரிவித்தார். இ-வங்கி மற்றும் இ-வேலட் முறை சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று மக்களை அவர் கேட்டுக் கொண்டார். இந்தியா முன்னேற்றத்தை விரும்புகிறது என்று குறிப்பிட்ட அவர், அதற்கு ஊழலும் கருப்புப் பணமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi