நாட்டுக்காக தனது வாழ்க்கையைத் தியாகம் செய்த இந்த நாட்டின் தலைமகனை நாம் நினைவுகூர்வது இன்றைய தினம் நமக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இது அயராது உழைப்பதற்கான உணர்வு, நாட்டுக்காக தியாகம் செய்வது ஆகியவை நம்மை தேதி, நேரம் மற்றும் நாளின் காலத்திற்கு அப்பாற்பட்டு நம்மை இங்கு ஒன்றாகக் கொண்டு வந்துள்ளது. ஆச்சார்ய சத்யேந்திர நாத் போஸ் அவர்களின் 125வது பிறந்தநாளையொட்டி உங்கள் அனைவருக்கும் குறிப்பாக அறிவியல் சமூகத்திற்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, ஒவ்வோர் ஆண்டு தொடக்கத்திலும் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்து வருகிறது. உங்களுடன் சில கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த 1894ம் ஆண்டு இதே நாளில் பிறந்த ஆச்சார்ய சத்யேந்திர நாத் போஸ் அவர்களின் 125வது பிறந்த நாளை இந்த ஆண்டு முழுவதும் நாம் கொண்டாட இருக்கிறோம். தாம் வாழ்ந்த காலம் மற்றும் சமுதாயத்திற்கு முன்னரே அவரது சாதனைகள் பற்றி நான் அறிந்து கொண்டிருக்கிறேன்.
நண்பர்களே,இதனை தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் தனது கவிதைகள் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
‘‘வங்கத்தின் தண்ணீரிலும் மண்ணிலும் ஒரு நித்தியமான உண்மை ஊடுருவி இருக்கிறது.’’
இந்த உண்மைதான் எட்டுவதற்கு கடினமான உச்சத்தை வங்கத்தின் மக்களின் சிந்தனைகள் மற்றும் கருத்துகளைக் கொண்டு செல்கிறது. இந்த உண்மைதான் வங்கம் இந்த நாட்டின் முக்கியமான பகுதியாக ஆவதற்கும் பல நூற்றாண்டுகளாக அதனைத் தக்க வைத்துக் கொள்ளவும் காரணமாக அமைந்துள்ளது.
சுதந்திரப் போராட்டமாக இருக்கட்டும் அல்லது, இலக்கியமாக அல்லது அறிவியலாக அல்லது விளையாட்டாக இருக்கட்டும், இவை அனைத்திலும் வங்கத்தின் தண்ணீர் மற்றும் மண்ணின் தாக்கம் பிரதிபலிக்கிறது. சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், குரு ரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திர போஸ், சியாமப் பிரசாத் முகர்ஜி, பங்கிம் சந்திரர், சரத் சந்திரர், சத்யஜித் ரே, என நீங்கள் எந்தத் துறையை குறிப்பிட்டாலும் அந்தத் துறையில் வங்கத்தில் இருந்து நட்சத்திரம் ஒன்று ஜொலித்துக் கொண்டிருக்கும். உலகிற்குப் பல்வேறு முன்னணி விஞ்ஞானிகளை இந்தப் பகுதி அளித்துள்ளது என்பது இந்தியாவுக்கு பெருமிதம் அளிக்கும் விஷயமாகும். ஆச்சார்ய எஸ்.என். போஸ் தவிர ஜே.சி. போஸ், மேக்நாத் சாஹா போன்ற பல பெயர்களும் எண்ணிலடங்கா எண்ணிக்கையிலானவர்கள் நாட்டில் நவீன அறிவியலுக்கு மிக வலிமையான அடித்தளத்தை அளித்துள்ளனர்.
அவர்கள் மிகவும் குறைந்த ஆதாரங்கள் மற்றும் தீவிரமான கஷ்டங்களுக்கு இடையே தங்களது வாழ்க்கை மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் மக்களுக்கு சேவை செய்துள்ளனர். அவர்களது உறுதிப்பாடு மற்றும் படைப்பாற்றலில் இருந்து இன்றளவும் நாம் பயின்று கொண்டிருக்கிறோம்.
நண்பர்களே, ஆச்சார்ய எஸ்.என். போஸ் அவர்களின் வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள ஏராளமாக உள்ளன. அவர் சுயமாக கற்றுக் கொண்ட அறிஞராவார். முறையான ஆராய்ச்சிக் கல்வி மற்றும் உலகளாவிய அறிவியல் சமூகத்துடன் குறைவான இணைப்பு போன்றவை இதில் அடங்கும். 1924ம் ஆண்டு அவரது சாதனை படைத்த பல்வேறு செயல்பாடுகள் அறிமுகமில்லா அறிவியலின் மீது அவர் கொண்ட ஒரே எண்ணம் கொண்ட அர்ப்பணிப்பால் சாத்தியமானது.
அதிக எண்ணிக்கையிலான புள்ளி விவரங்களையும் நவீன அணு கோட்பாட்டுக்கான அடித்தளத்தை அவர் உருவாக்கினார். குவான்ட்டம் தியரி எனப்படும் கோட்பாட்டில் அவரது பணி கடைசி நான்கு புரட்சிகரமான கட்டுரைகளில் ஒன்று என ஐன்ஸ்டீனின் சரிதையை எழுதிய ஆபிரகாம் பேகூறுகிறார். போஸ் புள்ளிவிவரங்கள், போஸ் ஐன்ஸ்டீன் ஒடுக்கம் மற்றும் ஹிக்ஸ் போசம் போன்ற முறைகள் மற்றும் விதிகள் அறிவியல் வரலாற்றில் சத்யேந்திர நாத் போஸ் பெயரை அழிக்கவே முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டன.
அவரது சிந்தனைகள் மற்றும் பரவலான இயற்பியல் பயன்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றிருப்பதில் இருந்து அவரது பணியின் அடிப்படை முக்கியத்துவத்தை மதிப்பிடலாம்.
அறிவியல் பாடம் பிராந்திய மொழிகளில் பயிற்றுவிக்கப்படுவதற்கான அறப்போராளியாக பேராசிரியர் போஸ் திகழ்ந்தார். கியான் ஒ விஞ்ஞான் என்றவங்க மொழி அறிவியல் பத்திரிகையை அவர் தொடங்கினார்.
நமது இளைஞர்களிடையே அறிவியல் மீது புரிதல் மற்றும் விருப்பத்தை மேம்படுத்த, அறிவியல் தொடர்பைப் பெரிய அளவில் மேம்படுத்துவது முக்கியம். இந்தப் பணியை மேற்கொள்வதில் மொழி தடையை ஏற்படுத்துவதாக இருக்காமல்வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதாக இருக்க வேண்டும்.
நண்பர்களே, இந்தியாவில் அரசியல் ஆராய்ச்சிக்கான சூழல் பாரம்பரியமாகவே மிக வலிமையாக இருந்துள்ளது. திறன் அல்லது கடின உழைப்பு அல்லது நோக்கத்தில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.
கடந்த சில தசாப்தங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா மிகுந்த வேகத்தில் விரைவான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத்துறையாக இருந்தாலும் சரி அல்லது விண்வெளித் துறை அல்லது ஏவுகணைத் தொழில்நுட்பம் என எதுவாக இருந்தாலும் இந்தியா ஒட்டுமொத்த உலகத்திலும் தனது குறியீட்டைப் பதிவு செய்துள்ளது. நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் இந்த வெற்றிகள் நமது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமிதத்தை அளிக்கக் கூடியதாகும்.
இஸ்ரோ ஒரே ராக்கெட்டில் 100க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியபோது ஒட்டுமொத்த உலகமும் நம்மை பெரும் ஆச்சரியத்துடன் பார்த்தது. நமது விஞ்ஞானிகளின் இந்த சாதனையை இந்தியர்கள் அனைவரும் அந்த சமயத்தில் தலை நிமிர்ந்து பெருமிதம் அடைந்தனர்.
நீங்கள் ஆய்வகங்களில் மேற்கொண்ட கடின உழைப்பு மற்றும் நீங்கள் மேற்கொண்ட தியாகம் ஆய்வகங்களிலேயே முடங்கிப் போயிருந்தால் உங்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் இழைக்கப்பட்ட பெரும் அநீதியாக அமைந்திருக்கும். நாட்டின் அறிவியல் திறன்களை ஊக்குவிப்பதற்காக நீங்கள் ஆற்றும் கடினமான பணிகள் நவீன காலத்திற்கு ஏற்ப பின்பற்றத்தக்கதாக அமைந்து பொது மக்களுக்கு பயன்களை அளிக்கத்தக்கதாக இருக்கும்போது அவை இன்னும் கூடுதல் பயனளிப்பதாக இருக்கும்.
இதற்காகவே நமது ஆராய்ச்சி மற்றும் நமது புதுமைகளின் இறுதி முடிவுகள் தெளிவாக நிர்ணயிக்கப்படுவது மிகவும் அவசியமானதாக உள்ளது. உங்களது ஆராய்ச்சி ஏழை ஒருவரின் வாழ்க்கையை எளிதாக்குகிறதா, நடுத்தரவகுப்பினரின் பிரச்சனைகளை போக்குகின்றனவா என்பதே கேள்வியாக உள்ளது.
நமது அறிவியல் பரிசோதனைகளின் அடித்தளம் நமது சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக அமையும் போது, நீங்கள் இறுதி முடிவினை நிர்ணயிப்பது, உங்களது இலக்கை முடிவு செய்வது எளிதாக இருக்கும்.
நமது நாட்டு விஞ்ஞானிகள் தொடர்ந்து நமது நாட்டுக்கு தங்களது மாறுபட்ட சிந்தனையில் மூலம் இத்தகைய புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகளை அளிப்பார்கள் என்றும் அது சாதாரண மக்களுக்கு பயன் அளிப்பதாக இருக்கும்என்றும் அது அவர்களின் வாழ்க்கையை மேலும் எளிமையானதாக ஆக்கும் என்றும் நான் நம்புகிறேன்.
சூரிய மின்சக்தி, தூய்மையான எரிசக்தி, தண்ணீர் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மை போன்றவற்றை சிந்தையில் கொண்டு பல்வேறு அறிவியல் அமைப்புகள் தங்களது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்கி இருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. இத்தகைய பொருட்கள் மற்றும் முடிவுகள் ஆய்வகங்களிலேயே முடங்கிப் போய் விடாமல் இருப்பதை கவனித்துக் கொள்வது நமது கூட்டுப் பொறுப்பாகும்.
மதிப்பிற்குரிய விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களே, நீங்கள் அனைவரும் படித்தவர்களாகவும் குவாண்டம் நுணுக்கங்களில் நிபுணர்களாகவும் திகழ்கிறீர்கள். நான் அதைப் படித்ததில்லை. ஆனால் நமது அன்றாட வாழ்வில் பல பாடங்களை இயற்பியல் பயிற்றுவிக்கும் என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். ஆழமான கிணற்றுக்குள் அற்புதமான பொருள் ஒன்று எளிதாக தப்பி விட முடியாது. ஆனால் குவாண்டம் பொருளால் அது சாத்தியம்.
ஏதோ ஒரு காரணத்திற்காக நாம் நம்மைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளோம். நாம் மற்ற அமைப்புகளின் அல்லது தேசிய ஆய்வகங்களின் விஞ்ஞானிகளுடன் ஒத்துழைக்க, இணைந்து செயல்பட மற்றும் நமது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில்லை.
நாம் நம்முடைய உண்மையான திறனை எட்டவும் இந்திய அறிவியலை அதன் சரியான உயர்வுக்குக் கொண்டு செல்லவும் நாம் முடங்கிப் போகாமல் தப்பிக்கும் குவாண்டம் பொருளைப் போல் இருக்க வேண்டும். அறிவியல் அதிக அளவில் பன்முகம் கொண்டதாக மாறிவருவதாலும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுவதாலும் இது மேலும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
அதிகரித்து வரும் குறைந்த ஆயுட்காலம் கொண்ட இயல்பான மற்றும் ஆராய்ச்சிஉள்கட்டமைப்புகளின் அதிக பகிர்வின் தேவைப் பற்றித் தான் நான் குறிப்பிடுகிறேன்.
அறிவியல் துறைகள் தற்போது பன்முக அணுகுமுறையில் பணிபுரிந்து வருவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. வெளிப்படையான மற்றும் திறமையாக குறியிடுதல் மற்றும் ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் வகையில் அறிவியல் உள்கட்டமைப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்காக இணையதளம் ஒன்று உருவாக்கப்படுவதாக நான் புரிந்து கொண்டுள்ளேன்.
கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களுக்கு இடையே வலிமையான இணைப்புக்கான நுணுக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நகர அடிப்படையிலான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொகுப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் அனைத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பங்குதாரர்களான கல்வி நிறுவனங்கள் முதல் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்முதல் ஸ்டார்ட் அப் எனப்படும் புதிய நிறுவனங்கள் வரை ஒன்றாகக் கொண்டு வரப்படுகிறது. அனைத்து நிறுவனங்களையும் ஆய்வகங்களையும் இந்த யுக்தியின் கீழ் கொண்டு வரும் நமது திறனில்தான் இந்த முயற்சியின் வெற்றி உள்ளது. இதற்கு நம் ஒவ்வொருவரிடமிருந்தும் முழு மனத்திலான ஆதரவு தேவைப்படுகிறது. நாட்டின் மிகவும் பின்தங்கியுள்ள பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானிக்கு தில்லி ஐ.ஐ.டி. அல்லது டேராடூனில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். ஆய்வகம் என அனைத்திற்கும் ஆதாரங்களை அணுகும் வசதி யை இந்த நுணுக்கம் உறுதிப்படுத்த வேண்டும். பல்வேறு பகுதிகளின் மொத்தத்தைவிட அனைத்து முயற்சிகள் மற்றும் செயல்கள் பெரியதாக இருப்பதை உறுதிப்படுத்துவதாக நமது நோக்கம் இருக்க வேண்டும்.
நண்பர்களே, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப்ம் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் மாற்றத்திற்கான அசாதாரண எஞ்சினைப் போல் பணிபுரிய வேண்டும். நமது சமூகப் பொருளாதார சிந்தனைகளைக் கருத்தில் கொண்டு உங்களது புதுமைகளுக்கான திசையை முடிவு செய்ய வேண்டும் என்று உங்களை, நமது நாட்டின் அறிவியல் சமூகத்தை நாண் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
நமது நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் குறிப்பாக பழங்குடி இன குழந்தைகள் ஆயிரக்கணக்கான பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது குறித்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது என்ற போதிலும், இந்த நோய்க்கான குறைந்த செலவிலான எளிமையான தீர்வை அளிப்பதற்கான உறுதிமொழியை நாம் எடுத்துக் கொள்ள முடியுமா?
ஊட்டச்சத்து பிரச்சனைக்கு தீர்வுகாண கூடுதல் புரதச் சத்து கொண்ட மலிவான புதிய வகை பருப்பு வகைகளை நாம் உருவாக்க முடியுமா? நமது தானியங்கள் மற்றும் காய்கறிகளின் தரத்தை மேலும் மேம்படுத்த முடியுமா? நமது நதிகளை, நதிகளில் வளர்ந்துள்ள தேவையற்ற தாவரங்களைத் தூய்மைப்படுத்துவதற்கான மற்றும் நிதிகளை மாசற்றதாக ஆக்குவதற்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியை நம்மால் துரிதப்படுத்த முடியுமா?
மலேரியா, காசநோய் மற்றும் ஜப்பானிய மூளை அழற்சி போன்ற வியாதிகள் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான புதிய மருந்துகள், புதிய தடுப்பூசிகளை நாம் உருவாக்க முடியுமா? நமது பாரம்பரிய அறிவாற்றலை நவீன அறிவியலுடன் புதுமையான முறையில் கலந்திடுவதற்கான பகுதிகளை நம்மால் அடையாளப்படுத்த முடியுமா?
நண்பர்களே, பல்வேறு காரணங்களுக்காக நாம் நமது முதலாவது தொழில் புரட்சியை தவறவிட்டோம். இதே போன்ற வாய்ப்புகளை இன்று நாம் தவற விட முடியாது. செயற்கை நுண்ணறிவு, பெரும் தரவு மதிப்பீடு, இயந்திரம் கற்றல், சைபர் ஃபிசிகல் அமைப்புகள், மரபியல் மற்றும் மின்சார வாகனங்கள் ஆகியவை உங்களது கவனம் தேவைப்படும் புதிய சவால்கள். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளுக்கு இணையான வேகத்தை நமது நாடு கொண்டிருப்பதை தயவு செய்து உறுதிப்படுத்துங்கள்.
இந்தச் சவால்களை நமது அறிவியல் சமூகம் எதிர்கொண்டு சமாளிக்கும் வழி ஸ்மார்ட் உற்பத்தி, ஸ்மார்ட் நகரங்கள், இண்டஸ்ட்ரி 4.0 மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் ஆகியவற்றில் நமது வெற்றியை உறுதி செய்யும். நமது அறிவியல் சூழல் புதுமை படைப்போர் மற்றும் தொழில்முனைவோருடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களை உருவாக்கி, வழிநடத்தி அதிகாரம் பெறச் செய்ய வேண்டும்.
நண்பர்களே, நமது மக்கள்தொகையின் பலம் ஒட்டுமொத்த உலகத்திற்கும் பொறாமையை ஏற்படுத்துவதற்கான ஆதாரமாகத் திகழ்கிறது. இதனைக் கருத்தில் கொண்டுதான் அரசு ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, திறன் மேம்பாட்டு இயக்கம் மற்றும் பிரதமர் முத்ரா திட்டம் போன்ற திட்டங்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாம் இத்தகைய 20 நிறுவனங்களை நாட்டில் உருவாக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். இவை உலகத் தரமான நிறுவனங்களாக அங்கீகரிக்கப்பட்டு உலகில் தங்களது குறியீட்டைப் பதிவு செய்திருக்கிறது.
உயர்கல்வியில் செயல்பாடுகளைக் கொண்டுள்ள தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை நிபுணத்துவம் கொண்ட நிறுவனங்கள் இயக்கத்தில் இணைய அரசே அழைப்பு விடுத்து வருகிறது. நாங்கள் விதிகளைத் திருத்தியதுடன் சட்டத்திலும் திருத்தங்கள் செய்திருக்கிறோம். தேர்வு செய்யப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ரூ. 1000 கோடி நிதி உதவி அளிக்கப்படும்.
அடிப்படை அறிவியலுக்கான எஸ்.என். போஸ் தேசிய மையம் மற்றும் அது போன்ற இதர நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை தரவரிசையில் முன்னிலையில் உள்ள நிறுவனமாக ஆக்கும் வகையில் அதற்கான திட்டத்தை உருவாக்கி பணியாற்ற வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
இன்றைய தினம், நான் மேலும் ஒரு விஷயத்தை உங்களிடம் வலியுறுத்தும் வகையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுவதை மேலும் ஊக்குவிக்கும் வகையில் உங்கள் நிறுவனங்களில் அத்தகைய சூழலை உருவாக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது நேரத்தில் சிறிதளவை ஒதுக்கி ஒரு குழந்தையின் அறிவியல் மீதான மற்றும் ஆராய்ச்சியின் மீதான விருப்பத்தை அதிகரிக்கச் செய்தால் அது இந்த நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும். இது எஸ்.என். போஸ் அவர்களின் 125வது பிறந்தநாளில் அவருக்கு செலுத்தும் பெரும் அஞ்சலியாக இருக்கும்.
நண்பர்களே, 2017ம் ஆண்டில், நாம் அனைவரும், 125 கோடி இந்தியர்களும் கூட்டாக இணைந்து ஒரு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டுள்ளோம். புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்பதே அந்த உறுதிமொழி. இது நாட்டில் உள்ள அனைத்து உள் குறைபாடுகளில் இருந்து விடுபட வேண்டும் என்பது தான் அந்த உறுதிமொழி. நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவதே இந்த உறுதிமொழி.
இந்த உறுதிமொழியை அடைவதற்கான மிக முக்கிய ஆண்டாக 2018 அமைந்துள்ளது. நமது ஒட்டுமொத்த சக்தியையும், நமது ஒட்டுமொத்த பலத்தையும் செலுத்தி இந்த உறுதிமொழியை எட்டுவதற்கான ஆண்டு இதுவாகும்.
நாட்டின் ஒவ்வொரு தனி நபரும், ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு துறையும் மற்றும் ஒவ்வொரு அமைச்சகமும் இதற்காக தங்களது பங்கினை அளிக்க வேண்டும். ஒரு ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட 5 முதல் 10 நிமிடங்களுக்குள் அது தனது உயர்வேகத்தை எட்டுவது போலவே இந்த 2018ம் ஆண்டில் நாம் உயர் வேகத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.