Government of India's 'Act East policy' puts this (ASEAN) region at the centre of our engagement: PM Modi
Task of transforming India is proceeding at an unprecedented scale: PM Modi
Digital transactions have increased significantly. We are using technology to reach out to people: PM
Keeping our emphasis on 'Minimum Government, Maximum Governance', about 1200 outdated laws have been repealed in the last three years: PM
We want to make India a Global Manufacturing Hub and we want to make our youngsters job creators: PM Modi

ஆசியான் தொழில் வணிக ஆலோசனை மன்ற பெருந்தலைவர்

திரு.ஜோய் கான்செப்சியான் அவர்களே

மேன்மை தங்கியவர்களே;

மகளிர் மற்றும் பெருந்தகையாளர்களே!

துவக்கத்திலேயே, தாமதத்திற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். அரசியல் போன்றே வணிகத்திலும் நேரம் மற்றும் காலம் மிக முக்கியமானதாகும். ஆனால் சில நேரங்களில் நமது முயற்சிகளை மீறியும், நம்மால் அதற்கு உதவ இயலாது. நான் முதன்முறையாக பிலிப்பைன்சிற்கு வருகை தந்து, மணிலாவில் இருப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இந்தியாவும், பிலிப்பைன்சும் பொதுவாக பகிர்ந்து கொள்வதற்கு ஏராளம் உள்ளன:

  • நம் இரு நாடுகளும் பன்முக சமூகங்கள் மற்றும் வலுவான ஜனநாயகம் கொண்டவை.
  • நமது பொருளாதாரங்கள், உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களாகும்.
  • கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனையும் ஆற்றலை கொண்ட பெருமளவிலான, இளைய மற்றும் ஆர்வமிக்க மக்கள்தொகையை நாம் கொண்டுள்ளோம்.
  • இந்தியாவை போன்றே, பிலிப்பைன்சும் சேவைகளுக்கான வலுவான உறைவிடமாக உள்ளது.

இந்தியாவில் உள்ளது போன்றே, இங்கு பிலிப்பைன்சிலும், அரசு மாற்றத்தை காணவும், உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்தவும், உட்கட்டமைப்பை உருவாக்கவும், ஊழலுக்கு எதிராக போராடவும் விரும்புகிறது. எங்களது தலைசிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் இங்கு முதலீடு செய்துள்ளதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அவை பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பிலிப்பைன்சின் சேவைகள் துறை உலகமயமாக்க ஊக்கமளிக்கின்றன.

நண்பர்களே,

இன்று காலை, ஆசியான் உச்சிமாநாட்டு தொடக்க விழா நிகழ்ச்சியில், ராமாயணத்தின் அடிப்படையிலான ‘ராமா ஹரி’ என்ற நாட்டியத்தின் சிறப்பான நிகழ்வை நாம் கண்டோம். அது வரலாற்றில் இந்திய மக்களுக்கும், ஆசியானுக்கும் இடையேயான பிணைக்கப்பட்ட உறவை வெளிப்படுத்துகிறது. அவை வெறும் வரலாற்று தொடர்புகள் மட்டுமல்ல. இது வாழும் பகிரப்பட்ட பாரம்பரியம். எனது அரசின் கிழக்கை நோக்கிய கொள்கை, இப்பகுதியை நமது ஈடுபாட்டின் மையமாக உள்ளது. ஆசியான் பகுதியில் உள்ள ஒவ்வொரு நாட்டுடனும்  நாம் சிறப்பான அரசியல் மற்றும் மக்களோடு-மக்களின் உறவுகளை கொண்டுள்ளோம்.  நமது பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளையும் அதே நிலைக்கு கொண்டு வர நாம் விரும்புகிறோம்.       

 

நண்பர்களே,

இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்த செய்யும் பணி எதிர்பார்க்காத அளவில் நடைபெற்று வருகிறது. எளிதான, திறன்மிக்க மற்றும் வெளிப்படையான அரசமைப்பு கொண்ட நல்ல அரசாட்சியை உறுதிப்படுத்திட, நாங்கள் பகலும், இரவும் உழைத்து வருகிறோம்.

உங்களுக்கு உதாரணம் ஒன்றை தருகிறேன்: தொலைத்தொடர்பு அலைக்கற்றை, நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் இதர தாது பொருட்கள் மற்றும் தனியார் ரேடியோ அலைவரிசைகள் போன்ற இயற்கை வளஆதாரங்களுக்கு திறந்த ஒப்பந்தப்புள்ளியை நாங்கள் துவங்கியுள்ளோம்.  இவை ஒட்டுமொத்தமாக சுமார் 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்தை பெற்றுத் தந்துள்ளன. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நாங்கள் பொறுப்புடைமையை அதிகரித்தும், விருப்பம் மற்றும் ஊழலை குறைத்துள்ளோம். நாங்கள் எங்களது உயரிய அடையாள அமைப்பினை, நிதி பரிமாற்றங்கள் மற்றும் அதற்கான வரிவிதிப்பிற்கு பயன்படுத்தி வருகிறோம், அதன் விளைவுகளையும் கண்டு வருகிறோம். உயர்மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தலுடன் கூடிய இத்தகைய நடவடிக்கைகள், எங்களது பொருளாதாரத்தின் பெரும் பகுதியை முறைப்படுத்தியுள்ளது. வருமான வரி தாக்கல் செய்யும் புதிய வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. ஒரே வருடத்தில், டிஜிட்டல் பரிமாற்றங்கள் 34 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், நாங்கள் ரொக்கமற்ற பொருளாதாரத்தை நோக்கி நடைபோட்டு வருகிறோம். மக்களை சென்றடையக்கூடிய வகையில் நாங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம். மைகவ் என்ற இணையதளம் வாயிலாக, 2 மில்லியன் சார்பு-செயல்பாடுமிக்க பொதுமக்களிடமிருந்து கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்த உத்திகள், ஆலோசனைகள் மற்றும் உள்ளீடுகளை பெற்றுள்ளோம். மேலும், சார்பு-செயல்பாடு அரசமைப்பு மற்றும் குறித்த நேர செயல்பாடு- பிரகதி என்ற புதிய நடைமுறையை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். அதன் மூலம் நாடு முழுவதும் காணொளி காட்சி மூலம் திட்ட செயலாக்கம் குறித்து நான் ஆய்வு செய்திடவும், பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணவும் முடிகிறது. குறைந்த அளவிலான அரசு மற்றும் அதிக அளவிலான அரசமைப்பு என்ற எங்களது குறிக்கோளை கருத்தில் கொண்டு, கடந்த மூன்றாண்டுகளில் 1,200 காலங்கடந்த சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.

திவால் மற்றும் திவால்தன்மை மற்றும் ஐ.பி.ஆர். மற்றும் நடுவர்மன்றம் ஆகியவைகளுக்கு புதிய சட்டங்கள் மற்றும் நிறுவனங்கள் தற்போது உள்ளன. சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படும் பட்டியலிருந்து 36 மாசுபடுத்தாத வெள்ளை தொழில் நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தை பதிவுச் செய்தல் தற்போது ஒரு நாள் நடைமுறையாக உள்ளது. நாங்கள் தொழிற்சாலை உரிமத்தை எளிதாக்கியுள்ளதுடன், சுற்றுச்சூழல் மற்றும் வன அனுமதிகளுக்கு இணையதள விண்ணப்ப முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.  இவை அனைத்தும், புதிதாக தொழில் தொடங்குதலை எளிதாக்கியுள்ளது. அதன் முடிவுகள் தெளிவாக உள்ளன.

இந்த வருடம், உலக வங்கியில் எளிதான வர்த்தக குறியீட்டில் இந்தியா 30வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  இந்த ஆண்டு எந்த நாட்டையும் விட இது உயரமான தாவுதலாக இருப்பதுடன், இந்தியாவின் நெடுங்கால சீர்திருத்த பயணத்திற்கான அங்கீகாரமாகும்.

மற்றும், இந்த உலகம் அறிவிப்பை பெற்றுள்ளது:

  • உலக பொருளாதார மன்றத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், உலக போட்டித்தன்மை குறியீட்டில் நாங்கள் 32 இடங்கள் முன்னேறியுள்ளோம்;
  • இரண்டு ஆண்டுகளில், டபிள்யு.ஐ.பி.ஓ.-வின் உலக புதுமை குறியீட்டில் நாங்கள் 21 இடங்கள் முன்னேறியுள்ளோம்.
  • உலக வங்கியின் 2016, சரக்குபோக்குவரத்து செயல்திறன் குறியீட்டில் நாங்கள் 19 இடங்கள் முன்னேறியுள்ளோம்;

நண்பர்களே,

எங்களது பொருளாதாரத்தின் பெரும்பாலான துறைகள் தற்போது அந்நிய நேரடி முதலீட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ளன. 90 சதவீதத்திற்கும் அதிகமான அந்நிய நேரடி முதலீட்டு துறைகள் தானியங்கி ஒப்புதல் வழியில் உள்ளன.  கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த வருடம் நாங்கள் 67 சதவீதத்திற்கும் அதிகமான அந்நிய நேரடி முதலீடுகளை பெற்றுள்ளோம். தற்போது, நாங்கள் உலகளாவிய ஒருங்கிணைந்த பொருளாதாரமாக உள்ளோம். மேலும், இத்தகைய மைல்கல்களை, சமீபத்திய மிகப் பெரிய சீர்திருத்தங்களுக்கு முன்பே அடைந்துள்ளோம்.

இந்த வருடம் ஜூலை மாதம், நாங்கள் நாடு முழுவதிற்குமான ஒரேமாதிரியான சரக்குகள் மற்றும் சேவைகள் வரிக்கு மாறும் கடினமான பணியை செயல்படுத்தினோம். இது, இந்தியா முழுவதும் பல்வகையான மாநில அளவில் மற்றும் மத்திய அளவிலான வரிகளை அகற்றியுள்ளது. நமது நாட்டின் பரப்பளவு மற்றும் வேற்றுமைகள் மற்றும் நமது அரசியலின் மத்திய ஆட்சிமுறையின்படி, இது சிறிய சாதனை அல்ல. அதே நேரத்தில், நாங்கள் இது மட்டும் போதுமானது என்பதை வலுவாக நம்பவில்லை.

நண்பர்களே, இந்தியாவின் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் வங்கி சேவைகளை அணுக இயலாத நிலை இருந்தது. இது சேமிப்பு மற்றும் நிறுவன கடன்களை பெறுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு மறுத்துள்ளது.  ஜன் தன் திட்டத்தின் மூலம், சில மாதங்களிலேயே, பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கை மாறியுள்ளது. 197 மில்லியன் வங்கிக் கணக்குகள் ஒரே வருடத்தில் துவங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை, இந்திய வங்கிகளில் 290 மில்லியன் அத்தகைய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. எளிதான ரொக்கமற்ற பரிமாற்றங்களுக்காக சுமார் 200 மில்லியன் ரூபே அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஏழைகள் வங்கியின் சேவைகளை பெறும் அணுகுமுறை. அரசாங்கத்தில் ஊழலை அகற்றுவதற்கு முக்கிய பங்கை ஆற்றியுள்ளது. தற்போது, ஏழைகளுக்கான மானியங்கள் அவர்களது வங்கிக் கணக்குகள் நேரடியாக, நேரடி  பலன் மாற்றங்கள் மூலம் செலுத்தப்படுவதன் மூலம், ஒழுகல்கள் மற்றும் மோசடிக்கான வாய்ப்புகளை ஒழித்துள்ளது. 146 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர், சமையல் எரிவாயுவிற்கு மட்டும் நேரடி ரொக்க மானியங்களை பெறுகின்றனர். இன்று, 59 விதமான திட்டங்களுக்கு நேரடி பலன் மாற்றங்களை அரசு பயன்படுத்தி வருகிறது. சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புமிக்க மானியங்கள், அதற்கான பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்படுகிறது.



நண்பர்களே,

இந்த உச்சிமாநாட்டின் முக்கிய கருப்பொருள்களில் ஒன்று – தொழில்முனைவோர் தன்மை. நாங்கள் இந்தியாவில் உருவாக்குவோம் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளோம். இந்த புதுமையான முனைப்பின் மூலம், நாங்கள் இந்தியாவை உலக மதிப்பீடு தொடர்பில் முக்கிய பங்குதாரராக மாற்றுவதில் உறுதியாக உள்ளோம். நாங்கள் இந்தியாவை உலக தொழிற்சாலை முனையமாக உருவாக்க உள்ளோம். அதே நேரம், எங்களது இளைஞர்கள், வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலைவாய்ப்பு அளிப்பவர்களாக இருக்க நாங்கள் விரும்புகிறோம். இதற்காக, தொடங்கிடு இந்தியா மற்றும் எழுந்து நில் இந்தியா இயக்கங்களை நாங்கள் துவங்கியுள்ளோம். சிறுதொழில் முனைவோரின் தொழில் துவங்கும் சக்தியை வெளிப்படுத்துவதில் முக்கிய தடையாக இருப்பது நிதிக்கான இணை உத்தரவாதம் இல்லாமையாகும். முதன்முறையாக இந்தியாவில், முத்ரா திட்டத்தின் கீழ் 90 மில்லியன் சிறு தொழில்முனைவோருக்கு இணை உத்தரவாதம் இல்லா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பிலிப்பைன்சின் மக்கள்தொகைக்கு ஏறக்குறைய நிகராகும். பொருளாதாரத்தில் சிறு தொழில்முனைவோர்களின் பங்களிப்பிற்கு இது அங்கீகாரமாக உள்ளதுடன், இணை உத்தரவாதம் இல்லா செயல்படக்கூடிய வர்த்தக உத்திகளை வைத்துள்ள நபருக்கு அதிகாரமளிப்பதாகும். பிலிப்பைன்ஸ் மற்றும் ஆசியான் பகுதிகளில் தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் அளிப்பதை நான் பார்க்கிறேன். இந்த உச்சிமாநாட்டில் துவங்கப்பட்டுள்ள ஆசியான் தொழில்முனைவோர்களை உருவாக்கும் திட்டம், பாராட்டப்பட வேண்டிய முயற்சியாக இருப்பதுடன், தொழில்முனைவோரின் மற்றொரு தேவையை பூர்த்தி செய்யும். உண்மையாக, வருங்காலத்தில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, உலகின் வளர்ச்சிக்கான எந்திரமாக இருக்கும். எனவே, ஆசியானுடன் தொடர்பை உருவாக்குவது இந்தியாவின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த திறமையான பகுதிக்கு நிலம், கடல் மற்றும் வான் தொடர்பை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். மியான்மர் மற்றும் தாய்லாந்து வழியாக தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிற நாடுகளை இணைக்கும் வகையிலான மூன்றுவழி நெடுஞ்சாலை அமைக்கும் பணி ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆசியான் இடையே கடல்சார் ஒப்பந்தத்தை இறுதி செய்ய நாங்கள் உழைத்து வருவதுடன், எங்களது அருகாமையில் உள்ள கடல்சார் நாடுகளுடன் கடல்வழி கப்பல் போக்குவரத்து சேவையை துவங்கிட முயன்று வருகிறோம். வான் இணைப்புத் துறையில், ஆசியான் நாடுகள் இந்தியாவில் உள்ள நான்கு மாநகரங்கள் மற்றும் 18 இதர இடங்களுக்கு தினசரி சேவையை இயக்கும் வசதியை பெற்றுள்ளன. இந்தியாவில் சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் வகையில் மின்னணு விசா முறை போன்ற நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். இந்தியாவிலிருந்து வெளியே செல்லும் சுற்றுலா, உலகின் அதிவேகமான விகிதத்தில் உயர்ந்து வருகிறது. இணைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும்வகையில், இந்தியா அடுத்த மாதம் புதுதில்லியில், ஆசியான்-இந்தியா இணைப்பு உச்சிமாநாட்டை நடத்த உள்ளது. இதில் அனைத்து ஆசியான் நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அலுவலர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள்  பங்கேற்கின்றனர். இப்பகுதியில் இந்தியா வர்த்தக வாய்ப்புகளை காண்பதை போல, ஆசியான் வர்த்தக சமூகம் இந்தியாவில் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளை அங்கீகரித்துள்ளன என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். உங்களில் சிலர், ஏற்கனவே இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பீர்கள், மற்றவர்கள் கண்டறியப்படாத வாய்ப்புகளை கண்டறிந்து வருகிறீர்கள். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், ஆசியான் தலைவர்களின் ஆசியான்-இந்தியா நினைவு உச்சிமாநாட்டையொட்டி, நாங்கள் ஆசியான்-இந்தியா வர்த்தக மற்றும் முதலீட்டு கூட்டம் மற்றும் பொருட்காட்சியை நடத்த உள்ளோம். நீங்கள் அனைவரும் அதில் கலந்துக் கொள்ள அழைக்கிறேன். ஆசியானை முன்னிறுத்திய வர்த்தக நிகழ்வான இந்நிகழ்ச்சி,  இதுவரை இந்தியா நடத்திய நிகழ்வுகளிலேயே பெரிய அளவிலானதாகும். உங்களது வளர்ச்சி கதையில் இந்தியா பங்கேற்க விரும்புகிறதுடன், எங்களது வளர்ச்சிக் கதையில் அனைத்து ஆசியான் நாடுகளும்  பங்கேற்க அழைக்கிறோம்.

மாபூஹாய்!

மராமிங் சலாமாத்

நன்றி!

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi congratulates hockey team for winning Women's Asian Champions Trophy
November 21, 2024

The Prime Minister Shri Narendra Modi today congratulated the Indian Hockey team on winning the Women's Asian Champions Trophy.

Shri Modi said that their win will motivate upcoming athletes.

The Prime Minister posted on X:

"A phenomenal accomplishment!

Congratulations to our hockey team on winning the Women's Asian Champions Trophy. They played exceptionally well through the tournament. Their success will motivate many upcoming athletes."