ஜம்மு காஷ்மீர் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர். "நாட்டை தெரிந்து கொள்வீர்" என்ற முன்முயற்சியின் கீழ் அவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் உள்கட்டமைப்பு வளர்ச்சி, விளையாட்டு வசதிகள், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பிரதமரின் அன்றாட பணிகள் குறித்து இளைஞர்களும் குழந்தைகளும் பிரதமரிடம் கேட்டு அறிந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இணைப்பையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து பிரதமர் அவர்களிடம் விளக்கினார். விளையாட்டு மற்றும் மக்களுக்கிடையே தோழமை உணர்வுக்கான அவசியத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார். கடினமான உழைப்பு சோர்வுக்கு என்றுமே காரணமாக இருப்பதில்லை. வேலையை நிறைவாக செய்யும் போது கிடைக்கும் மனநிறைவு சோர்வைவிட உயர்வானது என்று பிரதமர் கூறினார்.
பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.