உலக நாடுகளின் அதிபர்கள் தலைமை சமையல் நிபுணர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்கள்.
24 நாடுகளின் அதிபர்களின் தனிப்பட்ட தலைமை சமையல் நிபுணர்களைக் கொண்டது இந்த சங்கம். உலகின் தலை சிறந்த சமையல் நிபுணர்களின் சங்கம் என்று இந்தச் சங்கம் அழைக்கப்படுகிறது.
பாரீஸ் நகரை தலைமை இடமாகக் கொண்ட இந்த சங்கத்தில் உறுப்பினர்கள் கூட்டம் முதல் முறையாக புதுதில்லியில் நடைபெறுகிறது. தலைநகர் தில்லியில் தங்கி இருக்கும் அவர்கள் ஆக்ரா, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்கும் சென்று பார்வையிடுகிறார்கள்.
இந்த சர்வதேச சமையல் நிபுணர்களின் சங்கத்தில் இந்தியக் குடியரசுத் தலைவரின் தலைமை சமையல் நிபுணர் திரு மோன்ட்டு சைனி, அமெரிக்க அதிபரின் தலைமை சமையல் நிபுணர் கிறிஸ்டேட்டா கோமர்ஃபோர்டு, இங்கிலாந்து ராணியின் தலைமை சமையல் நிபுணர் திரு மார்க் ஃபிளானகன், ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.
பிரதமருடன் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் பிரதமருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள்