பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (29.06.2018) மகாராஷ்டிராவிலிருந்து வந்த பத்து பேரைக் கொண்ட பழங்குடி மாணவர்கள் குழு ஒன்றினைச் சந்தித்தார். இந்த மாணவர்கள், மகாராஷ்டிர மாநில அரசின் பழங்குடியினர் மேம்பாட்டு அமைப்பின் முன்முயற்சியான “ஷவுரியா இயக்கத்தைச்” சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் ஆவார்கள். இந்தக் குழுவிலுள்ள ஐந்து மாணவர்கள் 2018 மே மாதத்தில் எவரெஸ்ட் மலை மீது வெற்றிகரமாக ஏறியவர்கள்.
எவரெஸ்ட் மலை மீது ஏறியபோதும் பயிற்சியின்போதும் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர். பிரதமர் அவர்களுடைய சாதனைகளுக்காக மாணவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார். மாணவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டு, முறையாகத் தொடரவேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் பிரதமர் வாழ்த்தினார்.
இந்நிகழ்வின்போது, மகாராஷ்டிர முதல்வர் திரு. தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மத்திய உள்துறை விவகாரத்தின் இணையமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் அஹிர் உடன் இருந்தார்.