ஜேபி மோர்கன் சர்வதேசக் கவுன்சில் உறுப்பினர்களைப் பிரதமர் இன்று (22.10.2019) புதுதில்லியில் சந்தித்தார். 2007-க்குப்பின், முதன்முறையாக இந்த சர்வதேசக் கவுன்சில் இந்தியாவில் சந்தித்துள்ளது.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.16279600_1571753355_in1.png)
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேர், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜான் ஹோவர்ட், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர்கள் ஹென்றி கிசிங்கர், காண்டோலிசா ரைஸ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் போன்ற உலக அரசியல் தலைவர்கள், அதேபோல், ஜேமி டைமன் (ஜேபி மோர்கன் குழுமம்) ரத்தன் டாடா (டாடா குழுமம்) போன்ற உலக வர்த்தக மற்றும் நிதி நிறுவனங்களின் முன்னணித் தலைவர்கள், நெஸ்லே, அலிபாபா, ஆல்ஃபா, ஐபர்டோலா, கிராஃப்ட் ஹீன்ஸ் போன்ற உலக நிறுவனங்களின் முன்னணிப் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்டது இந்த சர்வதேசக் கவுன்சில்.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.87390200_1571753369_in2.png)
இந்தக் குழுவை வரவேற்ற போது, 2024-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ஐந்து லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றுவது பற்றிய தமது தொலைநோக்குத் திட்டம் குறித்து பிரதமர் விவாதித்தார். உலகத்தரத்திலான அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கும் சுகாதார வசதிகள் மேம்பாடு, தரமான கல்வியை வழங்குதல் ஆகியவை தமது அரசின் இதர முன்னுரிமைக் கொள்கைகள் என்றும் பிரதமர் கூறினார்.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.62585700_1571753385_in3.png)
அரசின் கொள்கை உருவாக்கத்தில் மக்களின் பங்களிப்பு வழிகாட்டியாக உள்ளது. வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை இந்தியா தனது ராணுவ கூட்டாளிகளுடனும், நெருக்கமான அண்டை நாடுகளுடனும் நியாயமான, சமத்துவமான, பலதுருவ உலக நிலையைக் கட்டமைக்க ஒருங்கிணைந்து பணியாற்றுவது தொடர்கிறது.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.11420000_1571753440_in4.png)