தூய்மை இந்தியா இயக்கம் (கிராமப்புறம்) இரண்டாம் கட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் உள்ள நூறு சதவீத கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத (திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத) பிளஸ் அந்தஸ்தை அடைந்துள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டினார்.
உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத்தின் எக்ஸ் சமூக வலைதளப் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் திரு.நரேந்திரமோடி வெளியிட்டுள்ள பதிவில், "வாழ்த்துகள்! மகாத்மா காந்தியின் பிறந்தநாளுக்கு சற்று முன்பு உத்தரப்பிரதேசத்தின் இந்த முன்னெப்போதும் இல்லாத சாதனை முழு நாட்டிற்கும் உத்வேகம் அளிக்கப் போகிறது,” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது பதிவில், “தூய்மைப் பணியில் நமது தொடர்ச்சியான முயற்சிகள் நமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆரோக்கியத்திற்கும், பெண் சக்தியை மதிப்பதற்கும் மிகவும் முக்கியம், " என்றும் குறிப்பிட்டுள்ளார்.
बहुत-बहुत बधाई! बापू की जयंती से ठीक पहले उत्तर प्रदेश की यह अभूतपूर्व उपलब्धि पूरे देश को प्रेरित करने वाली है। स्वच्छता के क्षेत्र में हमारा निरंतर प्रयास नारी शक्ति के सम्मान के साथ ही हमारे सभी परिवारजनों के स्वास्थ्य के लिए बेहद महत्वपूर्ण है। https://t.co/ufWY9LSVXO
— Narendra Modi (@narendramodi) September 29, 2023