காமன்வெல்த் விளையாட்டுக்கள் 2018-ல் பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வெற்றியாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (30.07.2018) கலந்துரையாடினார். புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தில் பிரதமர் இவர்களை சந்தித்தார்.
சர்வதேச அரங்கில் அவர்களின் சிறப்பு மிக்க செயல்பாட்டிற்காக பதக்கம் வென்றவர்களை பிரதமர் பாராட்டினார். அவர்களின் செயல்பாடு ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமிதம் அடையச் செய்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.
இந்தியாவின் சிறிய நகரங்களிலிருந்தும் விளையாட்டு திறனாளர்கள் உருவாகியிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் இவர்களை தொடர்ச்சியாக வளர்ப்பது அவசியம் என்று வலியுறுத்தினார்.
பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) கர்னல் ராஜவர்தன் ரத்தோர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.