பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, நித்தி ஆயோக் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட “பொருளாதார கொள்கை – செல்ல வேண்டிய பாதை” என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று, 40-க்கும் மேற்பட்ட பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல்துறை வல்லுநர்களுடன் உரையாடினார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், பேரியல் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு, வேளாண்மை மற்றும் நீர்வளம், ஏற்றுமதி, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற முக்கிய பொருளாதார அம்சங்கள் குறித்து, ஐந்து குழுக்களாக தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர், கலந்துரையாடலில் பங்கேற்று, பொருளாதாரம் சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ் கோயல் மற்றும் திரு ராவ் இந்தர்ஜித் சிங் ஆகியோர் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நித்தி ஆயோக் துணைத் தலைவர் திரு ராஜீவ் குமார் மற்றும் மத்திய அரசு, நித்தி ஆயோக்கைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.