அஜ்மீர் ஷரீப் காஜா மொய்நுதீன் சிஷ்டி தர்காவுக்கு வழங்கப்பட வேண்டிய போர்வையை பிரதமர் திரு நரேந்திர மோடி புது தில்லியில் இன்று மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வீ மற்றும் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் ஒப்படைத்தார்.
வருடாந்திர உர்ஸ் திருவிழாவை முன்னிட்டு அஜ்மீர் ஷரீப் காஜா மொய்நுதீன் சிஷ்டியின் தொண்டர்கள் அனைவருக்கும் பிரதமர் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் காஜா மொய்நுதீன் சிஷ்டி இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியத்தின் மிகபெரிய சின்னம் என்றார். கரீப் நவாஸ் அவர்களின் மனித நேய சேவை வருங்காலத் தலைமுறையினருக்கும் மிகப்பெரிய ஊக்கம் அளிப்பதாக அமையும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். நடைபெற உள்ள உர் திருவிழா வெற்றிகரமாக நடத்தப்படுவதற்கு தனது சிறந்த வாழ்த்துகளையும் பிரதமர் தெரிவித்தார்.
PM hands over the Chaadar to be offered at Dargah of Khwaja Moinuddin Chishti, Ajmer Sharif to Ministers @naqvimukhtar & @DrJitendraSingh. pic.twitter.com/pmw3qwnt32
— PMO India (@PMOIndia) March 24, 2017