பழம்பெரும் இந்திக் கவிஞர் கேதார்நாத் சிங் மரணம் குறித்து பிரதமர் திரு நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமது இரங்கல் செய்தியில் “மாபெரும் கவிஞர் மற்றும் எழுத்தாளரான கேதார்நாத் சிங்கின் மரணம் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர் பொதுவாழ்க்கையின் உணர்வுகளுக்கு தமது கவிதைகளில் இடமளித்தார். இலக்கிய உலகுக்கும் பொதுமக்களுக்கும் அவர் எப்போதும் உணர்வூக்கம் அளிப்பவராகவே இருப்பார்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கேதார்நாத் சிங்கிற்கு 2013-ஆம் ஆண்டு ஞானபீட விருது வழங்கப்பட்டது. “அபி பில்குல் அபி,“ “ஜமீன் பக் ரஹி ஹை,“ “அக்கால் மே சாரஸ்,“ போன்ற பல இலக்கிய நூல்களைப் படைத்துப் பெருமை பெற்றவர் அவர்.
हिन्दी के महान कवि-साहित्यकार केदारनाथ सिंह जी के निधन से गहरा दुख हुआ है। उन्होंने लोकजीवन की संवेदनाओं को अपनी कविताओं में जगह दी। साहित्य जगत और सामान्य जन दोनों को हमेशा उनसे प्रेरणा मिलती रहेगी। ईश्वर दिवंगत आत्मा को शांति दे और परिवार को इस दुखद घड़ी में संबल प्रदान करे: PM
— PMO India (@PMOIndia) March 20, 2018