உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்ட யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது அமைச்சரவைச் சகாக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை நினைவுகூர்ந்துள்ள பிரதமர், முதலமைச்சரின் தலைமையின் கீழ், மாநிலம் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுதும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் டுவிட்டர் பதிவு வருமாறு;
‘’ உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது அமைச்சர்களுக்கு வாழ்த்துக்கள். கடந்த 5 ஆண்டுகளில், மாநிலத்தின் வளர்ச்சியில் பல மைல்கல் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. உங்கள் தலைமையிலான அரசு, மாநில மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி, வளர்ச்சிக்கான மற்றொரு புதிய அத்தியாயத்தை எழுதும்’’
उत्तर प्रदेश के मुख्यमंत्री पद की शपथ लेने पर @myogiadityanath जी और उनके मंत्रिमंडल को हार्दिक बधाई। पिछले 5 वर्षों में राज्य की विकास यात्रा ने कई अहम पड़ाव तय किए हैं। मुझे विश्वास है कि आपके नेतृत्व में प्रदेश जन आकांक्षाओं को पूरा करते हुए प्रगति का एक और नया अध्याय लिखेगा। pic.twitter.com/b3hcLMQsMJ
— Narendra Modi (@narendramodi) March 25, 2022