குவைத் நாட்டின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஷேக் சபா அல்–கலீத் அல்–ஹமாத் அல்–சபாவுக்கு, பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
திரு.மோடி பகிர்ந்துள்ள தொடர் டுவிட்டர் பதிவுகளில், “டிசம்பர் 5 ஆம் தேதியன்று வெற்றிகரமாக நடைபெற்ற தேசிய சட்டப் பேரவை தேர்தல்களை அடுத்து, குவைத் நாட்டின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஷேக் சபா அல்–கலீத் அல்–ஹமாத் அல்–சபாவுக்கு எனது அன்பான நல்வாழ்த்துகள்.
குவைத் மன்னரான மேதகு ஷேக் நவாஃப் அல்-அகமது அல்-ஜபீர் அல்-சபாவின் தொலைநோக்கு தலைமையின் கீழ், மிகச் சிறப்பான நமது இருதரப்பு உறவுகள் மென்மேலும் செழித்தோங்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
I am confident that our excellent bilateral relations will continue to expand and flourish under the visionary leadership of His Highness Sheikh Nawaf Al-Ahmed Al-Jaber Al-Sabah, Amir of the State of Kuwait.
— Narendra Modi (@narendramodi) December 8, 2020
Hearty congratulations and best wishes to His Highness Sheikh Sabah Al-Khaled Al-Hamad Al-Sabah, on his re-appointment as the Prime Minister of the State of Kuwait, after the successful National Assembly elections on December 5th.
— Narendra Modi (@narendramodi) December 8, 2020