அமெரிக்க ஐக்கிய நாடுகளின் துணை அதிபராக பதவியேற்றுள்ள திருமதி. கமலா ஹாரிசுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் விடுத்துள்ள சுட்டுரைப் பதிவில், “துணை அதிபராக பதவியேற்றுள்ள திருமதி. கமலா ஹாரிசுக்கு வாழ்த்துகள். இந்திய-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்கி உள்ளேன். இந்திய-அமெரிக்க நட்புறவானது நமது புவிக்கு பலனளிக்கக் கூடியது” என்று தெரிவித்துள்ளார்.
Congratulations to @KamalaHarris on being sworn-in as @VP. It is a historic occasion. Looking forward to interacting with her to make India-USA relations more robust. The India-USA partnership is beneficial for our planet.
— Narendra Modi (@narendramodi) January 20, 2021