பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா 400 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற லட்சிய இலக்கை குறித்த காலத்திற்கு 9 நாள் முன்னதாகவே அடைந்திருப்பதற்காக விவசாயிகள், நெசவாளர்கள், எம்எஸ்எம்இ-க்கள், பொருள் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முதன் முறையாக 400 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்து அதனை அடைந்துள்ளது. இந்த வெற்றிக்காக நமது விவசாயிகள், நெசவாளர்கள், எம்எஸ்எம்இ-க்கள், பொருள் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரை நான் பாராட்டுகிறேன்.
நமது தற்சார்பு இந்தியா பயணத்தில் இதுவொரு முக்கிய சாதனையாகும். #உள்ளூர் பொருட்கள் உலகளவில் செல்கிறது”
India set an ambitious target of $400 Billion of goods exports & achieves this target for the first time ever. I congratulate our farmers, weavers, MSMEs, manufacturers, exporters for this success.
— Narendra Modi (@narendramodi) March 23, 2022
This is a key milestone in our Aatmanirbhar Bharat journey. #LocalGoesGlobal pic.twitter.com/zZIQgJuNeQ