FIDE ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “FIDE ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற நமது செஸ் வீரர்களுக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுடைய கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் போற்றுதலுக்கு உரியவை. மற்ற செஸ் வீரர்களுக்கு உத்வேகம் தருவதாக இந்த வெற்றி இருக்கும். ரஷிய அணியினருக்கும் நான் பாராட்டுதல்கள் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
Congratulations to our chess players for winning the FIDE Online #ChessOlympiad. Their hard work and dedication are admirable. Their success will surely motivate other chess players. I would like to congratulate the Russian team as well.
— Narendra Modi (@narendramodi) August 30, 2020