கோவா முதலமைச்சர் திரு. மனோகர் பாரிகர் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

திரு. மனோகர் பாரிகர் ஒப்பற்ற தலைவர். உண்மையான தேசப்பக்தர். சிறந்த நிர்வாகி. ஈடுஇணையற்ற தலைவராக விளங்கியவர் என்றும், அனைவரின் நன்மதிப்பையும் பெற்றவர் என்றும் பிரதமர் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு திரு.பாரிகர் ஆற்றிய அப்பழுக்கற்ற சேவை பல தலைமுறைகளால் நினைவு கூறப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திரு. மனோகர் பாரிகர் மறைவால் நான் துயரத்தில் ஆழ்ந்துள்ளேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் தமது இரங்கலை தெரிவித்துள்ள பிரதமர், அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நவீன கோவாவை வடிவமைத்தவர் திரு. மனோகர் பாரிகர் என்றும், அவரது நட்பு ரீதியிலான ஆளுமை மற்றும் அனைவராலும் எளிதில் அணுகக் கூடிய இயல்பான பண்பு ஆகியவற்றால் பல ஆண்டுகளாக சிறந்த தலைவராக அவரால் நீடிக்க முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். திரு. பாரிகரின் மக்கள் ஆதரவு கொள்கைகளால் கோவா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சராக திரு. பாரிகர் ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு இந்தியா நன்றிக்கடன் பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர், பாதுகாப்பு நலன்களுக்காக அவர் மேற்கொண்ட முடிவுகள் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தியது என்றும் குறிப்பிட்டுள்ளார். ராணுவத்திற்கான உபகரணங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை திரு. பாரிகர் ஊக்குவித்தார் என்றும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காக உழைத்தவர் என்றும் பிரதமர் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Beyond Freebies: Modi’s economic reforms is empowering the middle class and MSMEs

Media Coverage

Beyond Freebies: Modi’s economic reforms is empowering the middle class and MSMEs
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 24, 2025
March 24, 2025

Viksit Bharat: PM Modi’s Vision in Action