ராஜஸ்தானின் பார்மரில் நிகழ்ந்த சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில் கூறியிருப்பதாவது:
“ராஜஸ்தானின் பார்மரில் நேரிட்ட சாலை விபத்து வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர தருணத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும்: பிரதமர்”
राजस्थान के बाड़मेर में हुआ सड़क हादसा अत्यंत दुखद है। इसमें जिन लोगों को जान गंवानी पड़ी है, उनके परिजनों के प्रति मैं अपनी गहरी संवेदना व्यक्त करता हूं। ईश्वर दुख की इस घड़ी में उन्हें संबल प्रदान करे: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 7, 2022