இந்திய விமானப் படையின் மார்ஷல் அர்ஜன் சிங் மறைவிற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிட்டுள்ள பிரதமர், இந்திய விமானப் படையில் திறன் வளர்ப்பதற்கு இந்திய விமானப் படை மார்ஷல் அர்ஜன் சிங் செலுத்திய கவனம், நமது பாதுகாப்புத் திறனுக்கு கூடுதலாக பெரும் வலிமையை சேர்த்தது எனத் தெரிவித்துள்ளார். மேலும், அவரை போற்றுதலுக்குரிய வான் வீரர் மற்றும் நல்ல மனிதர் என அழைத்துள்ள பிரதமர், அவரது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் பிறருக்கும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
“இந்திய விமானப் படை மார்ஷல் அர்ஜன் சிங்கின் மறைவினால் இந்திய துயரம் அடைந்துள்ளது. தேசத்திற்கு அவர் ஆற்றிய தன்னகரில்லா சேவை நாம் என்று நினைவில் கொண்டிருக்கிறோம்.
இந்திய விமானப் படை மார்ஷல் அர்ஜன் சிங்கின் இந்திய விமானப் படையில் திறன் வளர்ப்பதற்கு செலுத்திய கவனம், நமது பாதுகாப்புத் திறனுக்கு கூடுதலாக பெரும் வலிமையை சேர்த்தது
1965-ம் ஆண்டு, இந்திய விமானப் படை மார்ஷல் அர்ஜன் சிங்கின் தலைசிறந்த தலைமையின் கீழ், இந்திய விமானப் படையின் போற்றத்தக்க செயலை இந்தியா என்றும் மறக்காது.
சில காலங்களுக்கு முன்னர் நான் அவரை சந்தித்தபோது, தனது மோசமான உடல்நிலையின்போது, நான் வேண்டாம் என்றபோதும், அவர் எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்க முயற்சித்தார். அத்தகையது அவரது வீரருக்கான ஒழுக்கம்.
போற்றுதலுக்குரிய விமானப்படை வீரர் மற்றும் நல்ல மனிதரான இந்திய விமானப் படையின் மார்ஷல் அர்ஜன் சிங்கின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் பிறருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக”, என பிரதமர் தெரிவித்துள்ளார்.