முன்னாள் மத்திய அமைச்சர் திரு ஜஸ்வந்த் சிங்கின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
"அரசியல் மற்றும் சமூதாயம் குறித்தான விஷயங்களில் அவரது பிரத்தியேக கண்ணோட்டத்துக்காக ஜஸ்வந்த் சிங் அவர்கள் நினைவு கூறப்படுவார். பாஜகவை வலுப்படுத்துவதற்கும் அவர் பங்காற்றினார். எங்களது உரையாடல்களை நான் எப்போதுமே நினைவில் வைத்துக் கொள்வேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி," என்று அவர் கூறினார்.
"தொடக்கத்தில் ஒரு ராணுவ வீரராகவும், பின்னர் அரசியலுடனான அவரது நீண்டகால தொடர்பு மூலமும் நமது நாட்டுக்கு ஜஸ்வந்த் சிங் அவர்கள் சிறப்பாக பணியாற்றினார். வாஜ்பாய் அவர்களின் அரசில் முக்கியமான துறைகளுக்கு பொறுப்பு வகித்த அவர், நிதி பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை போன்றவற்றில் தனது முத்திரையை ஆழமாக பதித்தார். அவரது மறைவால் துயரடைகிறேன்," என்று பிரதமர் தெரிவித்தார்.
"திரு மன்வேந்திர சிங்குடன் பேசி திரு ஜஸ்வந்த்சிங் அவர்களின் துரதிருஷ்டவசமான மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்தேன்.
அவரது சுபாவத்துக்கு ஏற்றவாறு கடந்த ஆறு வருடங்களாக நோயுடன் மிகவும் துணிச்சலோடு ஜஸ்வந்த் அவர்கள் போராடினார்," என்று அவர் மேலும் கூறினார்.
Jaswant Singh Ji will be remembered for his unique perspective on matters of politics and society. He also contributed to the strengthening of the BJP. I will always remember our interactions. Condolences to his family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) September 27, 2020