உத்தரகாசியில் பனிச்சரிவின் காரணமாக மலையேற்றப் பயிற்சியின்போது நேரு மலையேற்ற பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதிகாரிகள் நிலைமையைக் கண்காணிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“உத்தரகாசியில் பனிச்சரிவின் காரணமாக மலையேற்றப் பயிற்சியின்போது என்.ஐ.எம். மலையேற்ற பயிற்சியாளர்களின் விலைமதிப்பில்லாத உயிர் பிரிந்தது, மிகவும் வருத்தமான செய்தி. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.”
It is saddening that we have lost precious lives of those associated with a NIM Uttarkashi mountaineering expedition. Condolences to the bereaved families. Rescue operations are underway and the situation is being closely monitored by the authorities: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 4, 2022