தீவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான உயர் நிலை குழு இன்று கூடியது.
நிதி ஆயோக், மத்திய உள் துறை அமைச்சகம் மற்றும் முத்த அதிகாரிகளின் யோசனைகள் அடங்கிய தீவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்த விளக்ககாட்சி பிரதமரிடம் காண்பிக்கப்பட்டது.
இந்தியாவில் மொத்தமாக 1382 கரைக்கு அருகாமையில் உள்ள தீவுகள் உள்ளன. இதில் தீவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக முதல் கட்டமாக 26 தீவுகளை அதிகாரிகள் பரிந்துரைத்து உள்ளனர். இந்த 26 தீவுகளில், அந்தமான் மற்றும் நிகோபாரில் உள்ள தீவுகள் உட்பட இந்தியாவின் பல்வேறு கடல்சார் பகுதிகள் இதில் அடங்கும்.
பொது உள்கட்டமைப்பு, சுற்றுலா, வேளாண் (பசுமை வேளாண் மற்றும் மீன்வளர்ப்பு), கார்பன் அளவை மாற்றாத மின்சார உற்பத்தி ஆகியவற்றையொட்டி வளர்ச்சி நடவடிக்கைகள் இருக்கும் என்று பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் தீவுகளின் வளங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இந்த தீவுகளில் சுற்றுலாவிற்கான திறனையும் விவரித்தார். தீவுகளின் வளர்ச்சி திட்டங்களை விரைவாக செயல்படுத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்ட பிரதமர் இந்த நடவடிக்கைகளில் சூரிய ஒளி சக்தியை பரவலாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.