பாரதிய மக்கள் மருந்தகத் திட்டத்தின் சாதனைகள் மிகவும் திருப்தியளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இத்திட்டம் கோடிக்கணக்கான மக்களின் சிகிச்சை செலவுக்கான கவலைகளை மட்டும் நீக்காமல், அவர்களுடைய வாழ்வை எளிதாக்கியுள்ளது.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 5-வது மக்கள் மருந்தக தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இத்திட்டம் நாட்டின் சாதாரண மக்களின் வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மருந்தகங்களிலிருந்து இன்று, நாள்தோறும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருந்துகளை வாங்குகின்றனர். இங்கு சந்தை விலையைவிட 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைவான விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
“பாரதிய மக்கள் மருந்தகத் திட்டத்தின் சாதனைகள் மிகவும் திருப்திகரமாக உள்ளன. இது நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் சிகிச்சைச் செலவு குறித்த கவலையை நீக்கியது மட்டுமின்றி, அவர்களின் வாழ்க்கையையும் எளிதாக்கியுள்ளது.
भारतीय जन औषधि परियोजना की उपलब्धियां काफी संतोषप्रद हैं। इससे न केवल इलाज के खर्च को लेकर देश के करोड़ों लोगों की चिंताएं दूर हुई हैं, बल्कि उनका जीवन भी आसान हुआ है। https://t.co/pLzDSpCcfp
— Narendra Modi (@narendramodi) March 7, 2023