PM Modi dedicates National Police Memorial to the nation, salutes the courage and sacrifice of police personnel
PM Modi announces award in the name of Netaji Subas Chandra Bose, to honour the police and paramilitary personnel, involved in disaster response operations
Central sculpture of the National Police Memorial represents capability, courage and service orientation of the police forces, says PM
National Police Memorial would inspire the citizens and educate them about the bravery of police and paramilitary personnel: PM
Under Modernization of Police Forces (MPF) scheme, we are equipping the police forces with latest technologies, modern communication systems and weapons: PM

காவல்துறை நினைவு தினமான இன்று (21.10.2018) தேசிய காவல் நினைவகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அரப்பணித்து வைத்தார்.

பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை கவுரவிக்கும் வகையில், சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் விருது ஒன்றையும் பிரதமர் அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுக்கு உரியவர் அறிவிக்கப்படுவார். பேரிடர் காலத்தில் மக்களின் உயிர்களை காப்பாற்றுவதில் வீர, தீரத்துடன் செயல்படுபவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.

உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு தேசிய காவல் நினைவிடத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். லடாக்கில் இந்திய-திபெத் எல்லையில் உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் உயிர் பிழைத்த மூன்று பேரை பிரதமர் கவுரவித்தார். தேசிய காவலர் அருங்காட்சியகத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பார்வையாளர்கள் பதிவேட்டிலும் அவர் கையெழுத்திட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தேசிய சேவையில், தங்கள் இன்னுயிரை ஈந்த தீரச் செயலுக்காக காவல் பணியாளர்களை வணங்குவதாக பிரதமர் கூறினார். லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் வீரத்துடன் போராடிய காவல் பணியாளர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர், அவர்களது குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய காவல் நினைவகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சியடைவதாக கூறிய பிரதமர், இந்த நினைவிடத்தில் மத்தியில்அமைந்துள்ள சிலை, காவல் படையினரின் திறன், வீரம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை குறிப்பதாக தெரிவித்தார். இந்த தேசிய காவல் நினைவகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் மக்களை எழுச்சி பெறச்செய்யும் என்றும் காவல் மற்றும் துணை ராணுவ பணியாளர்களின் வீரம் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கும் என்றும் பிரதமர் கூறினார். நாடு தற்போது அனுபவிக்கும் அமைதி, பாதுகாப்பு, வளம் ஆகியன காவல், துணை ராணுவ, ஆயுதப்படைகளின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் தியாகத்தினால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது என்று கூறினார்.

தேசிய பேரிடர் நடவடிக்கை படையினர் மற்றும் மாநில பேரிடர் நடவடிக்கை படையினரின் பங்களிப்பு மற்றும் தியாகங்களையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். பேரிடர் நடவடிக்கை படையில் காவல்துறையின் துணை ராணுவப் படையினரும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் பேரிடர்களை கையாள்வதில் இவர்களின் பங்கு அளப்பரியது என்றும் பிரதமர் கூறினார்.

தேசிய காவல் நினைவிடம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இதனை அமைப்பதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முன்னுரிமை அளித்து குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடித்தது என்றார். தேச நிர்மாணத்தில் முக்கிய பங்காற்றிய மக்களுக்கு அதிகபட்ச மரியாதை அளிக்கும் மத்திய அரசின் தொலைநோக்கிற்கு இந்த நினைவிடம் சான்று பகர்வதாக உள்ளது என்று கூறினார்.

தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், காவல்துறையினர் தங்களது அன்றாட கடமைகளை நிறைவேற்றும்போது தொழில்நுட்பத்தையும் புதுமைப்படைப்புகளையும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக காவல் படையினர் நவீனமயமாக்கல் திட்டம் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் காவல்படையினரை தொழில்நுட்பம், நவீன தகவல் தொடர்பு அமைப்பு, நவீன ஆயுதங்கள் ஆகியவற்றின் மூலம் நவீனமயமாக்கி வருவதாக அவர் கூறினார்.

காவல்துறைக்கும் சமுதாயத்திற்கும் இடையே உறவை வலுப்படுத்துவதில் காவல்படையினர் பெரும்பங்கு ஆற்றுகின்றனர் என்று பிரதமர் கூறினார். இந்த வகையில் காவல்துறையினர் காவல் நிலையங்களை குடிமக்களுடன் நட்புறவு பேணுவதாக மாற்றியமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தேசிய காவல் நினைவகத்தில் மத்தியப் பகுதியில் சிலை, கடமையின்போது இன்னுயிரை ஈந்த காவல் பணியாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட வீரச்சுவர், இன்னுயிர் ஈந்த காவல்துறையினர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன அருங்காட்சியகம் ஆகியன இடம்பெற்றுள்ளன.

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi