புதுதில்லியில் உள்ள விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படை தளபதி இன்று அளித்த வரவேற்பு நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
நிகழ்விடத்தில் ‘இந்திய விமானப்படையின் புதிய கண்டுபிடிப்புகள்’ கண்காட்சியைப் பிரதமர் பார்வையிட்டார். உள்நாட்டுத் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தற்சார்பு என்பது இந்தக் கண்காட்சியின் மையப் பொருளாகும்.
இந்திய விமானப் படையின் மார்ஷல் அர்ஜன் சிங் நினைவுத் தபால் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.