குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். ``குடியரசுத் தலைவர் மாளிகை : ராஜ்ஜியம் தொடங்கி சுயராஜ்ஜியம் வரை'' என்ற தலைப்பிலான புத்தகத்தை அவர் வெளிடிட்டு, முதலாவது பிரதியை குடியரசுத் தலைவரிடம் அளித்தார்.
நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தாம் பிரதமராகப் பதவியேற்ற ஆரம்ப காலத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்த வழிகாட்டுதல்களை அவர் நினைவுகூர்ந்தார். பிரதமர் முகர்ஜியின் அனுபவத்தின் பலன்களை இந்த தேசம் நீண்ட காலத்துக்கு பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பிரணாப் முகர்ஜியுடன் பணியாற்றவும், அவரிடம் கற்றுக் கொள்ளவும் வாய்ப்பு கிடைத்திருப்பது தனக்கு கிடைத்த நல்வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையின் வரலாறு உள்பட பல்வேறு அம்சங்கள் பற்றியும் அங்கு வசிப்பவர்களின் வாழ்வு முறை மற்றும் செயல்பாடுகள் பற்றியும் பார்வையை அளிப்பதாக, இன்று வெளியிடப்படும் மூன்று புத்தகங்களும் அமைந்துள்ளன என்று பிரதமர் கூறினார்.
``ராஜ்ஜியம் தொடங்கி சுயராஜ்ஜியம் வரை'' புத்தகம் வெளியிடப்படுவதை தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு அஜய் மித்தல் பாராட்டினார். இந்த மூன்று புத்தகங்களுமே தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு மூலம் வெளியிடப்பட்டுள்ளன.