ஜார்கண்டின் பாக்கூரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தோர் விரைவில் குணமடைய அவர் பிரார்த்தித்துள்ளார்.
இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஜார்கண்டின் பாக்கூரில் ஏற்பட்ட பேருந்து விபத்தால் நான் துயரடைந்தேன் சோகமான இந்த தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடையட்டும்: PM @narendramodi”
“பாக்கூர் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்”
An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who lost their lives in an accident in Pakur. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 5, 2022