நேற்று (07.01.2019) மாலையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், பிரதமர் திரு.நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் திரு டொனால்டு ஜே. டிரம்பும், புதுவருட வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
கடந்த ஆண்டு இந்தியா-அமெரிக்க இடையே, உத்தி சார்ந்த கூட்டுறவில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து இருவரும் தமது நிறைவை தெரிவித்தனர். புதிய 2+2 பேச்சுவார்த்தை துவக்கம், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் இடையே முதன்முறையாக நடைபெற்ற முத்தரப்பு உச்சிமாநாடு போன்ற முன்னெடுப்புகளை இருவரும் பாராட்டினர்.
பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை, எரிசக்தி, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளில் ஒருங்கிணைப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு வளர்ந்து வருவதை இருவரும் ஆக்கப்பூர்வமாக கருத்தில் கொண்டனர். 2019லும் இந்திய- அமெரிக்க இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பாடுபடவேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொண்டனர்.