பிரதமர் திரு. நரேந்திர மோடியும் ரஷிய அதிபர் திரு. விளாடிமிர் புடினும் இன்று தொலைபேசி மூலம் 2019 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும், இன்று ரஷியாவில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, ரஷிய அதிபருக்கும் ரஷிய மக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இந்தியா-ரஷியா இடையேயான சிறந்த மற்றும் தனித்துவம் மிக்கஉத்தி சார்ந்த கூட்டுறவில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து இருதலைவர்களும் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். மே மாதம் சூச்சியில் நடைபெற்ற பல்வேறு தரப்பட்ட விவாதங்கள் மற்றும் அக்டோபரில் நடைபெற்ற வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக அதிபர் திரு. புடின் புதுதில்லி வந்திருந்தபோது நடைபெற்ற வெற்றிகரமான விவாதங்கள் ஆகியவற்றை இருவரும் நினைவு கூர்ந்தனர். இருதரப்பு உறவுகளை சிறப்பாக முன்னெடுக்க இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
2019, செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள கிழக்கத்திய பொருளாதார பேரவையின் ஆண்டு கூட்டத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பினை அதிபர் திரு புடின் மீண்டும் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு பதிலடி அளித்தல் ஆகிய முக்கிய துறைகளில் உள்ள இருதரப்பு உறவு குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
பலதரப்பட்ட அம்சங்களில் உலக அமைதி மற்றும் ஒழுங்குமுறையில் இந்தியா-ரஷிய ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதினை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். அதனால் ஐக்கிய நாடுகள், பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற பல்வேறு சர்வதேச அமைப்புகளுடன் உள்ள நெருங்கிய உறவினை இரு நாடுகளும் தொடர்ந்து கடைபிடிக்கும் என்று இருவரும் ஒப்புக்கொண்டனர்.