தேகன்பூரில் உள்ள பி.எஸ்.எஃப். அகாடெமியில் நடைபெற்ற காவல்துறைத் தலைமை இயக்குநர் / இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் மாநாட்டின் நிறைவு விழாவில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.
தில்லிக்கு வெளியே இந்த மாநாடு மாற்றப்பட்ட பின்னர் 2014 முதல் இந்த மாநாட்டின் இயல்பு மற்றும் நோக்கம் மாறியிருப்பதை பிரதமர் நினைவுகூர்ந்தார். இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்த அதிகாரிகளுக்கு அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த நாடு எதிர்கொண்டுவரும் சவால்கள் மற்றும் பொறுப்புகளின்படி இந்த மாநாடு மிகவும் ஏற்புடையதாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த மாநாட்டின் புதிய வடிவம் காரணமாக ஆலோசனைகளின் தரத்தில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டைப் பாதுகாப்பதில் நாட்டின் பாதுகாப்பு கருவிகளின் பணி பாராட்டுக்குரியது என அவர் கூறினார். எதிர்மறைச் சூழலில் அடிக்கடி பணியாற்ற வேண்டி இருந்த போதிலும் இங்கு கூடியுள்ள அதிகாரிகள் தங்க்ளது தலைமைப்பண்பை வெளிப்படுத்தி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படும் ஆலோசனைகளின் விளைவாக தற்போது காவல்துறையின் நோக்கம் தெளிவாக விளக்கப்பட்டால் அதனை செயல்படுத்த அதிக அளவிலான ஒத்துழைப்பு கிடைக்கும் என்றார். இந்த மாநாடு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்த முழுமையான பார்வையைப் பெற உதவுகிறது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இங்கு விவாதிக்கப்படும் தலைப்புகள் பரவலாகி உள்ளது என்று அவர் கூறினார். இது மூத்த அதிகாரிகளுக்கு முழுமையான புதிய தொலைநோக்கு பார்வை கிடைப்பதற்கு உதவியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த மாநாட்டுக்கு மேலும் கூடுதல் மதிப்புக்கான வழிகள் குறித்து ஆலோசித்த பிரதமர், ஆண்டு முழுவதும் பணிக்குழுக்களின் மூலம் அது குறித்த பின்தொடரல் தொடர வேண்டும் என்றார். இதில் இளம் அதிகாரிக்ளையும் ஈடுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்தப் பணியை சிறப்பானதாக்க இது அதிக அளவில் உதவும் என்று அவர் கூறினார்.
உலகளாவிய அளவில் மோசடி நிதி நடவடிக்கைகள் குறித்து தகவல் பரிவர்த்தனையில் அதிக அளவு உலகளாவிய ஒருமித்த கருத்து உருவாகிவருவதைக் குறிப்பிட்ட பிரதமர், இதனை அடைவதில் இந்திய முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்றார். உலக அளவில் வெளிப்படைத் தன்மை அதிக அளவில் ஏற்கப்படுவதால், பாதுகாப்பு விவகாரங்களில் மாநிலங்களிலும் வெளிப்படைத்தன்மை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பாதுகாப்பு என்பது தனியாகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அளவிலோ அடைய முடியாது என்றார் அவர். ஆனால தடைகளைத் தகர்த்தெறிவது மற்றும் மாநிலங்களுக்கு இடையே தகவல்களை பரிமாறிக்கொள்வது ஒவ்வொருவரையும் அதிக அளவில் பாதுகாக்கும். “நாம் ஒன்றாக இருக்கும் அமைப்பு அல்ல, ஆனால் நாம் ஒருங்கிணைந்த அமைப்பு” என்று அவர் கூறினார்.
சைபர் பாதுகாப்பு விவகாரங்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும் என்றும் அவற்றுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார். இது குறித்து அவர் சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் குறித்து குறிப்பிட்டார். குறுஞ்செய்தி உள்ளூர் மொழிகளில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். பிரச்சனைக்குரிய பகுதிகளைக் கண்டறிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
சிறப்பாக சேவை அளித்த புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கங்களை பிரதமர் வழங்கினார். பிரதமர் தனது உரையில் பதக்கம் வென்ற புலனாய்வுத் துறை அதிகாரிகளை அவர்களது சேவை அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டுக்காக பாராட்டினார்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ் நாத் சிங், உள்துறை இணையமைச்சர்கள் திரு. ஹன்ஸ்ராஜ் ஆஹிர், திரு. கிரன் ரிஜுஜு ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.