An active Opposition is important in a Parliamentary democracy: PM Modi
I am happy that this new house has a high number of women MPs: PM Modi
When we come to Parliament, we should forget Paksh and Vipaksh. We should think about issues with a ‘Nishpaksh spirit’ and work in the larger interest of the nation: PM

17 வது மக்களவையின் முதல் அமர்வு கூடுவதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்றார்.

அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக, பிரதமர் விடுத்த ஊடக அறிக்கையில், “2019 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அவையின் முதல் அமர்வு இன்று துவங்குகிறது. அனைத்து புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் வரவேற்கின்றேன். நாட்டிற்கு பணியாற்றுவதற்காக வரும் அவர்களுடன், புதிய நம்பிக்கைகளும், புதிய கனவுகளும், புதிய கடப்பாடுகளும் வருகின்றன”.

17 ஆவது மக்களவையில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறும் போதுதான் மக்களின் கனவுகளை நனவாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியினர் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். அவை நடவடிக்கைகளில் எதிர்க்கட்சியினர் முனைப்புடன் பங்கேற்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். மக்களவையில் தங்கள் எண்ணிக்கை குறித்து எதிர்க்கட்சியினர் வருந்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“நாடாளுமன்றத்திற்கு வரும் போது, நாம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பதை மறந்துவிட வேண்டும். அனைத்துப் பிரச்சினைகளையும், திறந்த மனதுடன், நடுநிலையாக எதிர்கொண்டு நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்காக செயல்பட வேண்டும்” என்று பிரதமர் கூறினார்.

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Modi blends diplomacy with India’s cultural showcase

Media Coverage

Modi blends diplomacy with India’s cultural showcase
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 23, 2024
November 23, 2024

PM Modi’s Transformative Leadership Shaping India's Rising Global Stature