பிரதமர் திரு நரேந்திர மோடியுடன், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் மேதகு உர்சுலா வான் டெர் லேயன் தொலைப்பேசியில் பேசினார்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலவும் தற்போதை கொவிட் நிலவரம் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
கொவிட்-19 இரண்டாம் அலைக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் மற்றும் அதன் உறுப்பு நாடுகளும் உடனடியாக உதவியதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான உத்திக் கூட்டாண்மை, கடந்தாண்டு ஜூலை மாதம் நடந்த உச்சி மாநாட்டில் இருந்து புதுப்பிக்கப்பட்ட ஊக்குவிப்பைக் கண்டுள்ளது என அவர்கள் குறிப்பிட்டனர்.
2021 மே 8ம் தேதி, காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ள இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டம், இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே ஏற்கனவே நிலவும் பன்முக உறவில், புதுப்பிக்கப்பட்ட ஊக்குவிப்பை வழங்குவதில் முக்கியமான வாய்ப்பாக இருக்கும் என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தின் +27 அமைப்பின் முதல் கூட்டமாக இருக்கும் மற்றும் இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தி கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதில், இரு தரப்பிலும் பகிரப்பட்ட லட்சியத்தையும் பிரதிபலிக்கிறது.