நெதர்லாந்து பிரதமர் மேன்மை தங்கிய திரு.மார்க் ரூட்டேயுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.
உக்ரைனின் தற்போதைய நிலை குறித்து விவாதித்த இரு தலைவர்களும் உக்ரைனில் மனிதாபிமான பிரச்சனைகள் தொடர்வது குறித்து தங்களின் கவலையைப் பகிர்ந்து கொண்டனர். மோதல் போக்குகளை நிறுத்தி பேச்சுவார்த்தை மற்றும் தூதரக உறவு பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற இந்தியாவின் தொடர்ச்சியான வேண்டுகோளைப் பிரதமர் மோடி வலியுறுத்தினார். ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையை வரவேற்ற பிரதமர் மோடி விரைவில் தீர்வு ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
2021 ஏப்ரலில் பிரதமர் ரூட்டேயுடன் இணையவழி உச்சி மாநாட்டில் பங்கேற்றதை நினைவுகூர்ந்த பிரதமர், விரைவில் பிரதமர் ரூட்டேயை இந்தியாவில் வரவேற்கும் தமது விருப்பத்தையும் வெளியிட்டார்.