பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரானை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
உக்ரைனில் தற்போது நிலவும் சூழல் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அங்கு தொடரும் போர் குறித்தும், மனித குலத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும் அவர்கள் தங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டனர்.
உக்ரைனில் நடைபெற்று வரும் வன்முறையை கைவிட்டு, போர் நிறுத்தத்தை மேற்கொண்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென்ற இந்தியாவின் தொடர் வேண்டுகோளையும் பிரதமர் வெளியிட்டார். அனைத்து நாடுகளில் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
இரு தரப்பிற்குமிடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையை பிரதமர் வரவேற்றார். மக்கள் எந்தவித இடையூறுமின்றி சுமூகமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
உக்ரைனிலிருந்து இந்தியர்கள் இடம் பெயர்ந்து வரும் இந்தியர்களை, தாய் நாட்டுக்கு அழைத்து வரும் இந்தியாவின் முயற்சிகளை பிரான்ஸ் அதிபரிடம் பிரதமர் விளக்கினார்.