இங்கு கூடியுள்ள புகழுக்குரிய பிரமுகர்களே,
முதலில் விருது பெறும் 5 வெற்றியாளர்களையும் எனது ஆழ்மனத்தில் இருந்து வாழ்த்துகிறேன். இந்த நிகழ்ச்சியை நாடு முழுவதும் தொலைக்காட்சியில் கண்டு கொண்டிருப்பார்கள் என்பதுடன், தாங்கள் நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும் அதே நாடாளுமன்றவாதிகள்தான் இவர்கள் என்பதை உணர்ந்து வியப்படைவார்கள். அனைவரும் இங்கு அமைதியாகவும் இணக்கமாகவும் இருப்பதைக் கண்டு குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் மக்களவைத் தலைவர் ஆகியோர் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். இந்த சூழல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இருக்கும் என்பதுடன், சாமானிய மக்களின் துயரங்களுடன் இணைந்திரும் நாம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நான் நம்புகிறேன். அவர்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏழைகள், கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளின் குரல்கள் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அவர்களது உணர்வுகள் மற்றும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் அரசை சென்றடைய வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த வாய்ப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எப்போதும் கிடைப்பதில்லை.கடின உழைப்பின் மூலம் அவர் தனது துறையில் மேன்மையை அடைந்திருக்க வேண்டும். மேற்கொள்ளப்பட்ட பணிகள் அடிப்படையில் அவர் நிச்சயமாக வளமடந்திருக்க வேண்டும். தாம் சார்ந்துள்ள துறையில் அவர் அதிகாரம் பெற்றவராக இருக்கலாம். எனினும் அமளி, குழப்பம் மற்றும் கோஷங்களின் சத்தம் காரணமாக இந்த நாடு பாதிக்கப்பட்டுள்ள அளவுக்கு அரசுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. கடின உழைப்புக்கும் போராட்டத்திற்கும் பிறகு மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கான வந்துள்ள ஆனால் பேசுவதற்கான போதிய வாய்ப்பு அளிக்கப்படாத மக்கள் பிரதிநிதிகளுக்கும் இது அதிக அளவு பாதிப்பை அளித்துள்ளது. எனவே இது அந்தப் பிராந்தியம் மற்றும் அந்த பிராந்தியத்தை சேர்ந்த மக்களுக்கு ஏற்படும் இழப்பு ஆகும். இந்தக் குழப்பங்கள் தொலைக்காட்சியில் சில நிமிடங்கள் அல்லது மணி நேரம் அல்லது நாள் முழுவதும் ஒளிபரப்பப் படுகிறது. அதன் பின்னர் அது நிறைவடைந்து விடுகிறது. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு பேச வாய்ப்பு கிடைத்து, இந்த அரசின் மீது பெரும் தாக்குதல் ஒன்றைத் தொடங்கினாலோ அல்லது சில கருத்துகளை முன்வைக்க தொடங்கினாலோ அவரது வார்த்தைகள் வரலாற்றின் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகிறது.
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் வார்த்தைகள் பதிவாவதை உறுதி செய்வது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகள் அரசு நடவடிக்கை எடுப்பதை கட்டாயமாக்குகிறது என்பதை உறுதி செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும். அவையில் இத்தகைய சூழல் ஒன்றை நம்மால் உருவாக்க முடியும். இத்தகைய வலிமையானதொரு சூழல் இருந்தால் தான் தேசத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சக்தியாக இருக்கும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதிப்பற்ற பேச்சுகளை பேசுவதில்லை என்பது எனது அனுபவம். நிர்ப்பந்தம் காரணமாக ஒருவர் செயல்படுகிறாரா, இல்லையா எனப்து தனிக்கதை, அரசில் ஆதாயம் அடைவதற்காக ஏதேனும் செய்ய சிலர் கட்டாயப்படுத்தப்படுகின்றனரா, இல்லையா என்பது வேறு. ஆனால் சில சமயங்களில் கொள்கை உருவாக்குபவர்கள் சிந்திப்பதற்கான குறியீடு ஒன்றை விட்டுச் சென்று விடுகிறது. எனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது ஒன்றும் எளிதான பணியன்று. அவர்கள் 125 கோடி இந்தியர்களின் கனவுகளையும் அந்த பிராந்தியத்தில் உள்ள மக்களின் தீர்மானங்களையும் பிரகாசமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியையும் சுமந்து செல்கின்றனர். இந்தப் பணியை நிறைவேறுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றவர்களில் சிலர் இன்று கவுரவிக்கப்படுகின்றனர். சக உறுப்பினர்கள் கவுரவிக்கப்படும் போது அத்தகையோருடன் இணைந்து பணியாற்றியதை நினைத்து நாம் பெருமிதமடைகிறோம். நாம் சக உறுப்பினர்களாக இருந்ததை நினைத்து நம் பெருமிதமடைகிறோம். அதே காலக்கட்டத்தில் நாம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருக்கிறோம். இது நமக்கு பெருமிதம் மற்றும் கவுரவத்தை அளிப்பதாகும்.
உங்கள் அனைவருக்கும் எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து மீண்டும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றிகள் பல.