பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் கிளப் எறிதல் எஃப் 51 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் பிரணவ் சூர்மாவின் விடாமுயற்சி மற்றும் மன உறுதியைப் பாராட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
"பாரீஸ் பாராலிம்பிக்கில் #Paralympics2024 ஆடவர் கிளப் த்ரோ எஃப் 51 இல் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரணவ் சூர்மாவுக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி, எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும். அவரது விடாமுயற்சியும், உறுதியும் போற்றத்தக்கது. #Cheer4Bharat"
Congratulations to Pranav Soorma for winning the Silver medal in the Men's Club Throw F51 at the #Paralympics2024! His success will motivate countless youngsters. His perseverance and tenacity are admirable. #Cheer4Bharat pic.twitter.com/TMkLKwQJ2g
— Narendra Modi (@narendramodi) September 5, 2024