மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 வரை குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும். குறிப்பாக, நமது பெண் சக்திக்கு இது பயனளிக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ .100 குறைக்கும் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளோம். இது பெண்கள் சக்தியின் வாழ்க்கையை எளிதாக்குவதோடு, கோடிக்கணக்கான குடும்பங்களின் பொருளாதாரச் சுமையையும் குறைக்கும். இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவும், முழு குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்."

 

"இன்று, மகளிர் தினத்தை முன்னிட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் நிதிச்சுமையைக் கணிசமாகக் குறைக்கும். குறிப்பாக, நமது பெண் சக்திக்கு இது பயனளிக்கும்.

சமையல் எரிவாயுவை மிகவும் மலிவானதாக மாற்றுவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உறுதி செய்வதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த நடவடிக்கை,  பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன் அவர்களுக்கு 'எளிதான வாழ்க்கையை’ ஏற்படுத்தித் தரும் எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப அமைந்துள்ளது.”

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Double engine govt becoming symbol of good governance, says PM Modi

Media Coverage

Double engine govt becoming symbol of good governance, says PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 17, 2024
December 17, 2024

Unstoppable Progress: India Continues to Grow Across Diverse Sectors with the Modi Government