உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கலாவதி தேவியின் வாழ்க்கைக் கதை அசாதரணமானது. லட்சக்கணக்கான பெண்களுக்கு அவர் ஒரு உந்து சக்தி. பிரதமர் மோடியின் சமூக ஊடகக் கணக்கு பக்கங்களை மகளிர் தினத்தன்று கையாண்டு, கழிப்பிடங்களை கட்ட முடியாதவர்களுக்கு அவற்றைக் கட்டித் தரும் தனது ஊக்கமளிக்கும் கதையைப் பகிர்ந்தார்.
தன்னுடைய கிராமத்தில் பணம் திரட்டிய அவர், மக்களுக்கு சுத்தமாக இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். தன் திடமான மன உறுதியின் மூலம், ஆயிரக்கணக்கான கழிப்பறைகளைக் கட்டியதோடு தாங்களாகவே தூய்மையைப் பராமரிக்கவும் ஊக்கப்படுத்தினார். ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தூய்மை அவசியம் என அவர் கூறினார்.
நாடெங்கிலும் உள்ள பெண்களுக்கு கலாவதி தேவியின் செய்தி இது தான்: "சமூகத்தை முன்னேற்ற மேற்கொள்ளும் சீரிய முயற்சிகள் ஒருபோதும் தோற்காது. உங்கள் வீட்டை விட்டு வெளியே வாருங்கள். யாராவது உங்களை எதிர்த்தால் அல்லது வாக்குவாதம் செய்தால் அவர்கள் செய்து விட்டு போகட்டும். உங்கள் குறிக்கோள்களை நீங்கள் அடைய விரும்பினால், பின்னால் திரும்பிப் பார்க்காதீர்கள்," என்று அவர் கூறுகிறார்.
मैं जिस जगह पे रहती थी, वहां हर तरफ गंदगी ही गंदगी थी। लेकिन दृढ़ विश्वास था कि स्वच्छता के जरिए हम इस स्थिति को बदल सकते हैं।
— Narendra Modi (@narendramodi) March 8, 2020
लोगों को समझाने का फैसला किया। शौचालय बनाने के लिए घूम-घूमकर एक-एक पैसा इकट्ठा किया।
आखिरकार सफलता हाथ लगी।
कलावती देवी, कानपुर #SheInspiresUs pic.twitter.com/t9b6deXt4g