மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர், வடகிழக்குப் பிராந்தியம் இனி புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இராது என்று கூறினார்.

அரசு பல்வேறு பிரிவுகளில் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக தற்போது வடகிழக்குப் பிராந்தியம் நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சிப் பகுதியாக மாறியுள்ளது என அவர் தெரிவித்தார்.

“வடகிழக்குப் பகுதி மக்கள் இப்போது தில்லி வெகு தொலைவு என உணரமாட்டார்கள். தற்போது அரசு அவர்களது வாசலுக்கே வந்துவிட்டது. நமது அமைச்சர்களும், அதிகாரிகளும் அந்த பிராந்தியத்திற்கு அடிக்கடி சென்று வருகின்றனர்” என்று அவர் கூறினார்.

மின்சார வசதி, ரயில்வே தொடர்பு, தொலைபேசி வசதி ஆகியவற்றை வழங்குவதுடன், பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளையும் தமது அரசு எடுத்து வருவதாக பிரதமர் கூறினார்.

அண்மையில் கையெழுத்திடப்பட்ட போடோ ஒப்பந்தம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் ஒன்று சேர்த்து பல பத்தாண்டுகளாக நிலவிய சிக்கலுக்கு தீர்வு காண உண்மையான முயற்சியுடன் இது மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தார்.

இந்தச் சிக்கலைத் தள்ளிப்போட்டு வந்ததன் விளைவாக, கடந்த பல பத்தாண்டுகளாக ஏற்பட்ட கிளர்ச்சியால், குறைந்தபட்சம் 40,000 பேர் உயிரிழந்தனர் என்று பிரதமர் தெரிவித்தார்.

“இருப்பினும், இம்முறை நாங்கள் அனைத்துத் தரப்பினரையும் ஒன்று சேர்த்தோம். இனி நிலுவையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை ஒப்பந்தம் தெளிவுப்படுத்தியுள்ளது” என்று அவர் கூறினார்.

 

 

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi