• தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகளின் மீது விரிவான மற்றும் திறமையான நடவடிக்கை மேற்கொள்ள, ஜி-20 நாடுகளிடையே வலுவான மற்றும் துடிப்பான ஒத்துழைப்பு அவசியம்.
• குற்ற நடவடிக்கைகள் தொடராமல் திறமையாக முடக்குவதுடன்; குற்றவாளிகளை விரைவில் திருப்பி அனுப்புவதோடு, குற்றவியல் நடவடிக்கைகளை மேம்பட்ட மற்றும் முறையான வகையில் கையாள்வது போன்ற சட்ட நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு.
• அனைத்து வகையான தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு அனுமதி மற்றும் புகலிடம் அளிக்க மறுப்பதற்கான நடைமுறையை உருவாக்க ஜி-20 நாடுகள் கூட்டு முயற்சி மேற்கொள்ளுதல்.
• ஊழலுக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கை, நாடுகடந்த திட்டமிட்ட குற்றத்திற்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கை, குறிப்பாக “சர்வதேச ஒத்துழைப்பு” ஆகியவை முழுமையாகவும், வலுவாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
• வெளிநாட்டு சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடையே, குறித்த நேரத்தில் விரிவான தகவல் பரிமாற்றத்திற்கான சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் மற்றும் சிறப்புக் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக, நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கான சிறப்புக் குழுவை ஏற்படுத்துதல்.
• தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் பற்றிய உறுதியான விளக்கத்தை உருவாக்கும் பணியை நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கான சிறப்புக் குழுவிடம் ஒப்படைத்தல்.
• தலைமறைவு பொருளாதார குற்றவாளிகளை அடையாளம் காணுதல், அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புதல், மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உகந்த, பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடிய மற்றும் உறுதியான நடைமுறைகளை உருவாக்கி, அந்தந்த நாடுகளின் உள்நாட்டுச் சட்டங்களுக்கு ஏற்ப, ஜி-20 நாடுகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்கும் பொறுப்பை நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கான சிறப்புக் குழுவிடம் ஒப்படைத்தல்.
• நாடு திருப்பி அனுப்பும் பணியை வெற்றிகரமாக செயல்படுத்துவது, சட்ட உதவி மற்றும் நாடு திருப்பி அனுப்புவதில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வது தொடர்பான, அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்காக, பொதுவான தளம் ஒன்றை ஏற்படுத்துதல்.
• சொந்த நாடுகளில் வரிப்பாக்கி வைத்துள்ள பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை அடையாளம் கண்டு, அவற்றை மீட்பதற்காக பணிகளை மேற்கொள்வது பற்றி ஜி-20 அமைப்பு பரிசீலிக்க வேண்டும்.