நிதானமிழக்காத தலைவர்

Published By : Admin | September 16, 2016 | 23:53 IST

வேலை வாங்குவதில் கடினமானவர் என்ற பெயர் மோடி அவர்களுக்கு உண்டு.  ஏனெனில் தன் அணியின் முழுதிறனுக்கேற்ப அவர்களிடம் வேலை வாங்குவதோடு, அதற்கு மேலும் எல்லைகளை தொடுவதற்கு ஊக்கப்படுத்துவார்.  ஆனால் அவர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படாதபோது மோடி நிதானமிழப்பாரா?  மோடி கோபக்காரரா?    

ஆகஸ்ட் 31, 2012ல் அப்படியொரு சூழல் எழுந்தது.  அந்த சூழலை நோக்கினால் அப்படியான நிலைமைகளை மோடி எப்படி கையாள்வார் என்பது புரியும்.  இந்திய அரசியல் தலைவர் ஒருவரின் முதல் கூகுள் ஹேங்கவுட் அமர்வு அது.  உலகமே அதை எதிர்நோக்கியிருந்ததால் கூகுள் சர்வர்கள் சுமை தாங்காமல் பிரச்சினைக்குள்ளாகி வேலை செய்யாமல் போய்விட்டன.  யூடியூபில் நேரடி ஒளிபரப்பு 45நிமிடம் தாமதமாகவே துவங்கியது.  உரையாடல் முடிந்தபின் கூகிள் சர்வதேச குழு மரியாதை நிமித்த சந்திப்புகாக மோடியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர்.  மிகவும் கச்சிதம் பார்ப்பவர் ஆயிற்றே, வார்த்தைகளை கொட்டிவிடுவாரோ என பயந்த அவர்களுக்கு மோடியை புன்னகையுடன் பார்த்து ஆச்சரியம்.  மோடி அவர்களின் வருங்கால தொழில்நுட்பங்களைப் பற்றி கேட்டறிந்ததோடு, அன்று நடந்த நிகழ்வை வருங்காலங்களில் என்ன செய்தால் தடுக்கலாம் என்பது குறித்து கேட்டறிந்தார்.  

இந்த சம்பவத்தில் மட்டுமல்ல, மோடியின் அடிப்படை குணமே எப்பேர்ப்பட்ட சூழலிலும் நிதானமிழக்காமல் இருப்பதுதான்.  அவருடன் உரையாடிய எல்லோருக்குமே அது தெரியும்.  அவர் கோபக்காரர் கிடையாது.  ஒரு தனிநபரோ, குழுவோ அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை என்றால், அந்த அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ள அவர்களை வலியுறுத்துவார்.  கற்றவற்றை அடுத்தமுறை பயன்படுத்தச் சொல்வார்.  உங்களுக்கு கற்பதில் விருப்பம் இருக்கும்வரை மோடி உங்கள் பக்கம் துணை நிற்பார்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Indian Toy Sector Sees 239% Rise In Exports In FY23 Over FY15: Study

Media Coverage

Indian Toy Sector Sees 239% Rise In Exports In FY23 Over FY15: Study
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் மோடியின் இதயத்தைத் தொடும் கடிதம்
December 03, 2024

திவ்யாங் (ஊனமுற்றோர்) கலைஞர் தியா கோசாய்க்கு, படைப்பாற்றலின் ஒரு தருணம் வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக மாறியது. அக்டோபர் 29 அன்று பிரதமர் மோடியின் வதோதரா ரோட்ஷோவின் போது, அவர் பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் அரசாங்கத்தின் தலைவரான மாண்புமிகு திரு. பெட்ரோ சான்செஸ் ஆகியோரின் ஓவியங்களை வழங்கினார். இரு தலைவர்களும் அவரது இதயப்பூர்வமான பரிசை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டு, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

பல வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 6 ஆம் தேதி, தியா தனது கலைப்படைப்பைப் பாராட்டி, ஸ்பெயின் ஜனாதிபதி மாண்புமிகு திரு. சான்செஸ் கூட அதை எப்படிப் பாராட்டினார் என்பதைப் பகிர்ந்து கொண்ட கடிதத்தைப் பிரதமர் மோடியிடம் இருந்து பெற்றார். "விக்சித் பாரத்" (வளர்ந்த பாரதம்) அமைப்பதில் இளைஞர்களின் பங்கில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, அர்ப்பணிப்புடன் நுண்கலைகளைத் தொடர பிரதமர் மோடி அவரை ஊக்குவித்தார். அவர் தனது தனிப்பட்ட தொடர்பை வெளிப்படுத்தி, அவரது குடும்பத்தினருக்கு அன்பான தீபாவளி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மகிழ்ச்சியில் திளைத்த தியா, அந்தக் கடிதத்தை தனது பெற்றோரிடம் காட்டினார், அவர்கள் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய கௌரவத்தைக் கொண்டு வந்ததற்காக மகிழ்ச்சியடைந்தனர். "எங்கள் நாட்டின் சிறிய பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். மோடி ஜி, உங்கள் அன்பையும் ஆசிர்வாதத்தையும் எனக்கு வழங்கியதற்கு நன்றி," என்று கூறிய தியா, பிரதமரின் கடிதம் வாழ்க்கையில் தைரியமான செயல்களைச் செய்ய தன்னை ஆழமாகத் தூண்டியது, மற்றவர்களுக்கும் அவ்வாறு செய்ய அதிகாரம் அளிக்கும் என்று தெரிவித்தார்.

திவ்யாங்களுக்கு (ஊனமுற்றோர்) அதிகாரம் அளிப்பதிலும் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதிலும் பிரதமர் மோடியின் இந்தச் செய்கை அவரது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. சுகம்யா பாரத் அபியான் (இந்தியாவில் அணுகல்தன்மையை மேம்படுத்துவதற்கான பிரச்சாரம்) போன்ற பல முயற்சிகள் முதல் தியா போன்ற தனிப்பட்ட தொடர்புகள் வரை, அவர் தொடர்ந்து ஊக்கமளித்து மேம்படுத்துகிறார். இந்த ஒவ்வொரு முயற்சியும் பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியமானது என்பதை நிரூபிக்கிறது.