பிரதமர் திரு. மோடிக்கு தொழில்நுட்ப சக்தியில் அபார நம்பிக்கை உண்டு. தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துகின்றவர் என்கிற முறையில், தொழில்நுட்பத்தை சுலபமான, சிக்கனமான, வேகத்தையும், எளிமையையும், சேவையையும் இணைக்கும் பாலமாக பார்க்கிறார். வேலைகளை வேகமாக முடிப்பதோடு, எல்லா நடைமுறைகளையும் எளிமையாக்குகிறது என்பதால் மக்களுக்கு சேவை செய்ய சிறப்பான முறை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே ஆகும். ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வை மேம்படுத்தவும், வெளிப்படையான நிர்வாகத்தை அமைக்கவும் சிறப்பான வழி தொழில்நுட்பம்தான் என மோடி உறுதியாக நம்புகிறார்.
2014 மே மாதம் பிரதமராக பதவியேற்றதில் இருந்து தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை தொடர்ச்சியாக அதிகரித்து வந்தார். ஒட்டுமொத்தமாக அரசு அலுவலகளை டிஜிட்டல் மயமாக்கும் வகையிலும், மக்களுக்கு துரிதமாக சேவைகளை வழங்கவும் டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பை அறிமுகப்படுத்தினார். அதேபோல திட்டங்களை மேற்பார்வையிட வசதியாகவும், மக்கள் குறைகளை தீர்க்கவும் பிரகதி (PRAGATI) என்கிற பல்நோக்கு பன்முகட்டு இணைய மேடையையும் அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி புதன்கிழமையிலும் உயரதிகாரிகளுடன் பிரதமரே நேரில் அமர்ந்து பிரகதி அமர்வுகளில் கலந்து கொள்கிறார். பல துறைகள் இதில் அலசப்படுகின்றன. இதன்மூலம் ஆக்கபூர்வமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசு நல்ல உடல்நடத்தையும், கல்வியையும் மக்களுக்கு வழங்கும் பொருட்டு தொழில்நுட்ப உபயோகத்தை பெருக்கி வருகிறது. பலகோடி விவசாயிகள் குறுந்தகவல்கள் மூலம் விவசாயம் சார்ந்த தகவல்களை பெற்று வருகிறார்கள். விவசாய தொழில்நுட்ப உட்கட்டமைப்பு நிதியின் மூலம் தேசிய விவசாய சந்தையை விளம்பரப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொது இணைய சந்தைகளோடு இந்தியா முழுதும் இருக்கும் இந்த ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகள் இணைக்கப்படும். விவசாயிகளும், வணிகர்களும் இதன்மூலம் விற்பனையும், கொள்முதலும் நியாயமான விலையிலும், வெளிப்படையாகவும் செய்து கொள்ள முடியும்.
ஜூலை 2014ல் பிரதமர் ‘எனது அரசு’ (My Gov) திட்டத்தை துவக்கிவைத்தார். இந்த திட்டம் இணையத்தை பயன்படுத்தி நிர்வாகத்திலும், கொள்கை முடிவுகளை எடுப்பதிலும் குடிமக்களை பங்குபெற வைப்பது. எனது அரசு முன்னெடுப்பில் பல்வேறு அமைச்சகங்களும், துறைகளும் தத்தமது திட்டங்கள் சார்ந்த மக்களின் கருத்துக்களைக் கேட்பார்கள். பிரதமர் பலமுறை எனது அரசு திட்டத்தை பலமுறை தன் மன் கீ பாத் எனும் வானொலி பேச்சிலும், பிற சூழல்களிலும் பயன்படுத்தியுள்ளார்.
2015 செப்டம்பர் மாதம் நடந்த தனது அமெரிக்க பயணத்தின்போது சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு சென்ற பிரதமர் அங்கு பல்வேறு முன்னணி தொழில்நுட்பங்களின் தலைவர்களை சந்தித்தார். ஃபேஸ்புக் தலைமைச் செயலகம் சென்றார். டவுன்ஹாலில் நடந்த கேள்வி பதில் நேரத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து பதில் அளித்தார். கூகுள் அலுவலகம் சென்ற பிரதமர் அங்கு நடக்கும் தொழில்நுட்ப புரட்சிகளை பார்வையிட்டார். “டிஜிட்டல் இந்தியா” இரவு உணவு சந்திப்பில் தொழில்நுட்ப உலகத்தைச் சேர்ந்த ஜாம்பவான்கள் பலர் கலந்து கொண்டனர். தொழில்நுட்ப தலைவர்களான திரு. சத்யநதெல்லாவில் இருந்து திரு. சுந்தர்பிச்சை வரை தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்திய அரசை பாராட்டினார்கள். தொழில்நுட்பத்தை வெகுவாக பயன்படுத்தும் துவக்கநிலை தொழில் ஆர்வலர்களையும் மோடி சந்தித்தார். திரு.எலான் மஸ்க் தனது டெஸ்லா மோட்டார் தொழிற்சாலையை மோடிக்கு சுற்றிக்காட்டினார். இருவரும் கிராமப்பகுதிகளை மேம்படுத்த தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசித்தனர்.
எப்போது வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டாலும் பிரதமர் தொழில்நுட்பம் சார்ந்த சந்திப்புகளை மேற்கொள்கிறார். இந்திய-ஆப்ரிக்க மாநாட்டின் போது, தொழில்நுட்ப ரீதியில் இந்தியா எப்படி ஆப்ரிக்காவுக்கு உதவ முடியும் என்பது குறித்து பிரதமர் விவரித்தார்.
தனிப்பட்ட முறையிலும் மோடியை அறிந்தவர்கள் தொழில்நுட்பம் மீதான அவரது ஆர்வத்தை பாராட்டுவார்கள். ஃபேஸ்புக், டுவிட்டர், லிங்க்ட் இன், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வீரியமாக செயல்படும் உலகத்தலைவர்களில் முக்கியமானவர் திரு. மோடி. அவற்றின் மூலம் மக்களுடன் உரையாடி அவர்களின் கருத்தைப் பெறுகிறார். சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமான மாற்றங்களுக்காக அவர் பயன்படுத்துகிறார். மகள்களுடன் மக்களை செல்ஃபி எடுத்து பகிரச் செய்வதாகட்டும், இன்க்ரெடிபிள் இந்தியாவுடனான மக்களின் அனுபவங்களை பகிரச் சொல்வதாகட்டும், அவர் மக்களுடன் தொடர்பில் இருக்கிறார்.
மொபைல் நிர்வாகம் எனப்படும் செல்பேசி நிர்வாகத்தில் திரு. மோடி ஆர்வமாக இருக்கிறார். அவருக்கென்று பிரத்யேகமாக ’நரேந்திரமோடி மொபைல் செயலி‘’ செயல்படுகிறது. ஆப்பிள் மற்றும் ஆண்டிராய்ட் ஃபோன்களில் உபயோகிக்க முடிந்த அந்த செயலிகளின் மூலம் மோடி குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
பிரதமர் திரு. மோடி 125 கோடி இந்தியர்களை தொழில்நுட்பத்தின் மூலம் இணைக்க அயராது, ஓயாது பாடுபடுகிறார். இணையத்தை எல்லோரையும் பயன்படுத்த வைத்து, இணையத்தை பயன்படுத்தும் எல்லோரையும் அதிகாரம் கொண்டவர்களாக மாற்ற பாடுபடுகிறார்