Quoteதங்களின் வேர்களோடு இணைந்திருக்கும் நாடுகள், வளர்ச்சியிலும் தேச நிர்மாணத்திலும் முன்னேறும்: பிரதமர்

அந்தமான், நிக்கோபாரில் உள்ள தீவுகளுக்கு நமது நாயகர்களின் பெயர்களை சூட்டுவது, அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூர்வதை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தெரிவித்தார். தங்களின் வேர்களோடு இணைந்திருக்கும் நாடுகள், வளர்ச்சியிலும் தேச நிர்மாணத்திலும் முன்னேறிச் செல்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் ஷிவ் அரூரின் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:

"அந்தமான், நிக்கோபாரில் உள்ள தீவுகளுக்கு நமது நாயகர்களின் பெயர்களை சூட்டுவது, அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூர்வதை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகும். நமது தேசத்தில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்த நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் புகழ்பெற்ற ஆளுமைகளின் நினைவைப் பாதுகாத்து கொண்டாடுவதற்கான எங்களது பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகவும் இது உள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கள் வேர்களுடன் இணைந்திருக்கும் நாடுகள்தான் வளர்ச்சியிலும் தேச நிர்மாணத்திலும் முன்னேறுகின்றன.

பெயர் சூட்டு விழாவில் நான் ஆற்றிய உரையும்  இங்கே உள்ளது. https://www.youtube.com/watch?v=-8WT0FHaSdU

மேலும், அந்தமான்  நிக்கோபார் தீவுகளின் அழகை அனுபவியுங்கள். செல்லுலார் சிறைச்சாலைக்கும் வருகை புரிந்து  மாபெரும் வீர சவார்க்கரின் துணிச்சலால் உத்வேகம் பெறுங்கள்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves $2.7 billion outlay to locally make electronics components

Media Coverage

Cabinet approves $2.7 billion outlay to locally make electronics components
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 29, 2025
March 29, 2025

Citizens Appreciate Promises Kept: PM Modi’s Blueprint for Progress