பிரதமரின் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளில் எண்ணற்ற இந்தியர்கள் தங்களின் தொழில்துறை திறன்களை வெளிப்படுத்தவும், வேலை வாய்ப்பை உருவாக்குபவராக மாற்றவும் வாய்ப்பை அளித்திருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த 7 ஆண்டுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் கவுரவத்தையும், வளத்தையும், அதிகப்படுத்துவதாகவும் முத்ரா திட்டம் விளங்குவதாக அவர் கூறினார்.
மைகவ் இந்தியா ட்விட்டருக்கு பதில் அளித்து பிரதமர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“ #நிதியில்லாதவர்களுக்கு நி்தியுதவி என்ற கோட்பாட்டினால், வழிநடத்தப்பட்ட முத்ரா திட்டம் எண்ணற்ற இந்தியர்கள் தங்களின் தொழில்துறை திறன்களை வெளிப்படுத்தவும், வேலை வாய்ப்பை உருவாக்குபவராக மாற்றவும் வாய்ப்பை அளித்துள்ளது. #பிரதமரின் முத்ரா திட்டத்தின் 7 ஆண்டுகள் பற்றி நாம் குறிப்பிடும் நிலையில், அது எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் கவுரவத்தையும், வளத்தையும், அதிகப்படுத்துவதாகவும் இருக்கிறது என்பதை அறிவோம்”
Guided by the principle of #FundingTheUnfunded, Mudra Yojana has given an opportunity to countless Indians to showcase their entrepreneurial skills and become job creators. As we mark #7YearsOfPMMY here is how it’s been a game changer and enhanced dignity as well as prosperity. https://t.co/h21i8kaknf
— Narendra Modi (@narendramodi) April 8, 2022