கென்டுக்கி மாகாண ஆளுநர் திரு. மாட் பெவின், பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று காந்தி நகரில் சந்தித்தார்.
வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான ஒருங்கிணைப்பு வலுவடைந்து வருவதையும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உத்தி சார்ந்த உறவு வலுவடைந்து வருவதைப் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் உற்பத்தித் துறையில் அமெரிக்காவின் முதலீடுகள் அதிகரித்து வருவதை வரவேற்ற பிரதமர், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் உள்ள வாய்ப்புகளை ஆராயும்படி அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கென்டுக்கி மற்றும் இந்தியா இடையே வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து ஆளுநர் பிரதமருக்கு விவரித்தார். கென்டுக்கி உள்ளிட்ட அமெரிக்க மாகாணங்களில் இந்திய தொழில் நிபுணர்கள் ஆற்றும் பங்கினை அவர் வரவேற்றார்.