இந்தியா-அமெரிக்க உத்தி சார் கூட்டு மன்றத்தின் தலைவர் திரு. ஜான் சாம்பர்ஸ் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று காந்திநகரில் சந்தித்தார்.
இருவரின் முந்தைய சந்திப்புகளை நினைவு கூர்ந்த பிரதமர், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகமும் மற்றும் பொருளாதார உறவுகள் அதிகரித்து வருவதை வரவேற்றார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான ஒருங்கிணைப்பு அதிகரித்து வருவதையும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உத்தி சார்ந்த உறவு வலுவடைந்து வருவதையும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் உற்பத்தி துறையில் அமெரிக்க நாட்டின் முதலீடுகள் அதிகரித்து வருவதை வரவேற்ற பிரதமர், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் உள்ள வாய்ப்புகளை ஆராயும் படி அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.