அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண ஆளுநர் திரு. கிரெக் அபாட், இந்தியாவிற்கு வர்த்தக நிமித்தமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் புதன் கிழமை பிரதமர் திரு. நரேந்திர மோடிபை சந்தித்தார்.
இந்தியா- அமெரிக்கா இடையேயான தளத்தகை கூட்டாண்மை வலுவாக வளர்ந்து வருவதை குறிப்பிட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, வர்த்தகம் மற்றும் தொழில், எரிசக்தி, தொழிற்சாலைகள், கல்வி மற்றும் மக்களோடு மக்கள் தொடர்பு போன்ற துறைகளில் பிணைப்புகளை வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்த துறைகளில் உள்ள உறவுகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் இரு பிரமுகர்களும் ஒப்புக் கொண்டனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் டெக்சாஸ் மற்றும் அமெரிக்காவிற்கு ஆற்றி வரும் பங்களிப்பினை ஆளுநர் அபாட் பாராட்டினார்.
Texas Governor Mr. @GregAbbott_TX met PM @narendramodi in Delhi today. @GovAbbott pic.twitter.com/Yf0czvjdaa
— PMO India (@PMOIndia) March 28, 2018