சிங்கப்பூரின் ஓய்வுபெற்ற மூத்த அமைச்சர் திரு. கோஹ் சோக் டாங் பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
அவருடன் கொண்டுள்ள நீண்டகால உறவை நினைவுகூர்ந்த பிரதமர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திரு. லீ குவான் யே பொதுநிலைக் கொள்கைக் கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைமைப் பொறுப்பை ஏற்றதற்காகப் பாராட்டு தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளில் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உயர்நிலைக் குழுவினரின் பல பயணங்கள், பரிமாற்றங்கள் ஏற்பட்ட உத்வேகத்தை வரவேற்பதாகவும் தெரிவித்தார். வர்த்தகம், முதலீடுகள், தொடர்புகள், ராணுவம், பாதுகாப்பு ஆகிய எல்லாத் துறைகளிலும் இரு தரப்பினருக்கும் இடையில் உள்ள நல்லுறவு வலுப்படுத்தப்படுவதையும் பிரதமர் வரவேற்றார்.
“கீழை நாடுகள் குறித்து இந்தியா – ஆசியான் நாடுகள் நல்லுறவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் கொள்கையில் சிங்கப்பூர் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. அந்த விஷயத்தில் ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதில் ஆரம்பகால நண்பனாகவும் வலுவான தோழனாகவும் இருந்தவர் திரு. கோ சோக் டாங்தான் என்பது குறிப்பிடத் தக்கது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், பரஸ்பர நலன்களுக்காக இரு தலைவர்களும் மண்டல உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.